வரும் 2010ம் ஆண்டில், ஆங்கிலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு சர்வதேச மொழி என்ற பெருமையை புதிய மொழியாக கருதப்படும் 'பங்லிஷ்' பெற்று விடும் என மொழியியலாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மக்கள் ஆங்கிலத்தை தங்கள் தாய்மொழியாக (முதன்மை மொழி) கொண்டுள்ளனர். இதன்படி வரும் 2010-ம் ஆண்டில் ஆங்கிலம் பேசும் இவர்களைப் போன்றவர்களின் மக்கள் தொகை 350 மில்லியனாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிற மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் பேசும் ஆங்கிலம், உண்மையான ஆங்கில உச்சரிப்பில் இருந்து மாறுபட்டுள்ளது.
உதாரணமாக சிங்கப்பூரில், ஆங்கிலத்தை 2ம் மொழியாக கொண்டவர்கள் பேசும் ஆங்கிலத்தில் மலாய், தமிழ், சீன மொழியின் கலப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்கள் புரிந்து கொள்வது கடினம்.
இதன் காரணமாக இவர்கள் பேசும் மொழிக்கு பங்லிஷ் (Panglish) அல்லது குளோபல் இங்லிஷ் (global English) என்று மொழியியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
உலகளவில் வரும் 2010ம் ஆண்டுக்குள் 'பங்லிஷ்' பேசுபவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனை தாண்டும் என்பதால், அப்போது இது சர்வதேச மொழி என்ற அந்தஸ்தை பெற்றுவிடும் என்றும் மொழியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment