| முதல்வருடன் முருகதாஸ் சந்திப்பு |
கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை வந்த சேலம் போலீஸார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கிரிமினலைப் போல இழுத்து வேனில் ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எழுத்தாளர் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட திரைத் துறையினர் மேலிடத்திற்குத் தகவலைக் கொண்டு போயினர். இதையடுத்து தாம்பரம் வரை சென்று விட்ட சேலம் போலீஸார் மேலிடத்தின் குறுக்கீட்டால் சென்னைக்குத் திரும்பி வந்தனர். ஏ.ஆர்.முருகதாஸை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டுத் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் சந்திரசேகரன் கொடுத்த புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று சேலத்தில் நடந்த விசாரணையிலேயே தெரிய வந்தும் கூட அதை மீறி சென்னைக்கு வந்து முருகதாஸை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்ற செயல் காவல்துறையின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமைந்து விட்டதாக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், துணைத் தலைவர் பி.வாசு, செயலாளர் அமீர்ஜான் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அவர்களுடன் முருகதாஸும் உடன் சென்றிருந்தார். அப்போது முருகதாஸ் விவகாரம் குறித்து முதல்வர் முழுவதுமாக கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது திரையுலக பிரச்சினைகள் குறித்தும் இயக்குநர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் விவாதித்தனர். |
Devil Advocate Movie
-
*Devil Advocate Movie - one of the best films Keanu Reeves*
The actual Devil's Recommend (marketed because *devil advocate movie* ) is
actually a 97 America...
14 years ago
No comments:
Post a Comment