![]() |
சில படங்களை நூறு நாள் ஓட்டுவார்கள். சில அதுவாகவே ஓடும். அஜித்தின் `பில்லா' இரண்டாவது வகை. நல்ல வசூலுடன் சதமடித்து படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இதமளித்திருக்கிறது.
அஜித்தின் முந்தையப் படங்களான `கிரீடம்', `ஆழ்வார்' இரண்டும் சரியாகப் போகவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் தொடங்கப்பட்டப் படம் `பில்லா'. விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் வெற்றியை சாத்தியப்படுத்தியது.
`சிவாஜி'க்குப் பிறகு சென்னையில் அதிக வசூல் அளித்த படம் `பில்லா'. ஏறக்குறைய நான்கே முக்கால் கோடி. நூறு நாள் ஆன பிறகும் கலெக்ஷனில் இன்னும் முதல் பத்து இடத்திற்குள் இருக்கிறதாம் இப்படம்.
படத்தின் வெற்றி விழாக்களை கொண்டாடுவதில் விருப்பமில்லாதவர் அஜித். `பில்லா' வெற்றி விழாவை கொண்டாடுவதிலும் அவருக்கு விருப்பமில்லை. படத்தில் பணிபுரிந்தவர்கள் மனசுக்குள்ளேயே ஷீல்டு பரிமாறிக் கொள்ள வேண்டியதுதான்.

No comments:
Post a Comment