Search

Custom Search

Friday, March 7, 2008

சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்ல வேண்டும்-அமீர்

மூன்றே படங்கள்தான் இயக்கியிருக்கிறார். அதற்குள்ளாகவே முத்திரை பதிக்கும் அங்கீகாரத்தைப் பெற்று விட்டவர் அமீர். "ராம்" படத்துக்காக சைப்ரஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றவர், இப்போது பெர்லின் படவிழாவில் `பருத்தி வீரன்' படத்துக்கு விருது பெற்று வந்திருக்கிறார். விருது, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என்று களிப்பின் கதகதப்பில் இருந்த அமீருடன் ஒரு சந்திப்பு.
இந்த விருதுகள் பற்றி உங்களது கருத்து....?
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மன நிறைவா இருக்கு. ராம் படத்தில் நடிப்புக்கும், இசையமைப்புக்கும் கிடைச்சது. பருத்தி வீரனுக்கு சிறந்த படம்கிற சிறப்பு விருது கிடைச்சது. பெர்லின் பட விழாவில் பருத்தி வீரனுக்கு கிடைத்துள்ள விருது, பெரிய அங்கீகாரம்.
உங்கள் படத்தை பெர்லின் பட விழாவிற்கு எப்படி அனுப்பினீர்கள்?
சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறோம். யதார்த்தமாக பண்ணியிருக்கோம்கிற நம்பிக்கையில்தான் படத்தை அனுப்பி வைத்தோம். நம் வேலையை உண்மையா, நேர்மையா செய்திருக்கோம்கிற நம்பிக்கை எனக்கு இருந்திச்சு. அதுக்கு பலன் உண்டுன்னு நம்பினேன்.
அப்படியானால் விருதை மனதில் வைத்து படம் எடுத்தீர்களா?
நான் கமர்ஷியலா படம் வெற்றி பெறணும்னு மட்டும்தான் படம் எடுத்தேன். விருதுக்காக படம் எடுக்கலை. கமர்ஷியலாகவும் வெற்றிப் பெற்ற படத்துக்கு விருதும் தேடி வருவது சந்தோஷமான விஷயம்தான்.
விருது விழா அனுபவம் எப்படி இருந்தது?
பெர்லின் பட விழாவில் 3000 படங்கள் பங்கேற்றன. பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டன. இந்தப் படங்களை 4 முக்கியப் பிரிவா பிரிச்சு, அதன்படி வரிசைப்படுத்துவாங்க. போட்டி பிரிவு, பனோரமா பிரிவு, போரம் பிரிவு, டேலண்ட் பிரிவு இப்படி பிரிவுகள் உண்டு. பருத்திவீரன் போரம் பிரிவில் கலந்துகொண்டது.
அமீர்

No comments: