தனிநபர் கணினிகளுக்கான அதிக சக்தி வாய்ந்த புதிய மைக்ரோ பிராசசர் சிப் ஒன்றை ஏ.எம்.டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபினாம் எக்ஸ்-3 (Phenom X3) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பிராசசர் சிப், முந்தைய ஏ.எம்.டி தனிநபர் கணினி பிராசசர்களை விட 30 சதவீதம் வேகமாக செயல்படும் என்றும், டியூவல்-கோர் (dual-core) பிராசசருக்கு இணையாக செயலாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனிநபர் கணினி சந்தையை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிராசசர், சமீபத்தில் இண்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய சிப்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தொகுப்பு, அதிதுல்லிய வீடியோ காட்சிகளை கண்டு களிப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது உள்ளிட்ட சேவைகளுக்கு இந்த புதிய பிராசசர் பயன்படும் என அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (ஏ.எம்.டி) நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment