எவரெஸ்ட் சிகரத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்ல சீன அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, மலையேற்ற வீரர்கள் எவரெஸ்டில் ஏற மே 10ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த 10ம் தேதி முதல் அமலாகியுள்ளது.
திபெத் தன்னாட்சி பகுதி மலையேற்ற கூட்டமைப்பின் சார்பில் 10ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேற்றத்தால் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழிப்பாதைகளில் அதிக நெரிசல் ஏற்படும் என்றும், இதனால் ஒலிம்பிக் ஜோதியை சிகரத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மலையேற்றத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டு திபெத் பகுதியை சீனப்படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரமும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment