Search

Custom Search

Saturday, March 29, 2008

ஃபிளாஷ் மீடியாவுடன் கூடிய செல்பேசி

நாம் செல்பேசிக்காக எவ்வளவு பணம் செலவு செய்தாலும், மிகச் சிறந்த செல்பேசிகளை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், லேப்டாப்பில் காணமுடிவது போல் இணைய தளங்களை செல்பேசியில் காணமுடியாது என்பது எதார்த்தம். சில அம்சங்கள் செல்பேசியில் வர வாய்ப்பேயில்லை என்ற நிலைமைதான் இன்று வரை நீடித்து வருகிறது.
ஆனால் இதனைக் கருத்தில் கொண்டு ஒபேரா மொபைல் செல்பேசி, உலகில் அதிக வெப்களை கொண்டு வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையான ஃபிளாஷ் மீடியா உள்ளடக்கங்களை அப்படியே ஒபேரா மொபைல் கொண்டு வருகிறது. ஒபேரா மொபைல் (Opera Mobile) வர்ஷன் 9.5 செல்பேசிகள் மற்றும் மடிக் கணினிகளில் ஆன்லைன் அனிமேஷன்கள் மற்றும் திரைப்படங்களையும் காண வழி வகை செய்கிறது.
இதற்கு முன்பு இந்த வசதிகளுக்காக வழங்கப்பட்டு வந்த தொழில் நுட்பங்கள் தோல்வியையே தழுவியுள்ளன. ஒரே ஒரு வெப்தான் உள்ளது. அதைத்தான் பயனர்கள் நாடுகின்றனர் என்கிறார் இதை உருவாக்கிய ஒபேரா சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நார்வே கிளை தலைமைச் செயலதிகாரி ஜான் வான் டெட்ச்னெர்.
செல்பேசி சேவைகள் மூலம் ஒரு கணினியில் நாம் எவ்வாறு பிரவுசிங் அனுபவங்களைப் பெறுகிறோமோ அதேபோன்று பெறுவதற்கான வடிவமைப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. ஆப்பிள் ஐ.போன் கூட முழு ஃபிளாஷ் மீடியா உள்ளடக்கங்களை ஆதரிப்பதில்லை.
முழு ஃபிளாஷ் மீடியா இருந்தால் வீடியோ இணையதளங்கள் பலவற்றை செல்பேசியிலேயே பார்க்க முடியும். ஆனால் ஐ போன் வாடிக்கையாளர்கள் பிளாஷ் லைட் என்ற ஒரு பிளாஷ் வகையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வீடியோ வெப் சைட்களை காண முடியும் என்றாலும், ஒலி மற்றும் வீடியோ தரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை என்றே இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஒபேரா மொபைல் நிறுவனம் நோகியா, சோனி எரிக்சன் ஆகிய செல்பேசி உபகரணத் உற்பத்தியாளர்களுக்கு இந்த மென்பொருளை வழங்கி வருவதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
ஆனால் வெளிச்சந்தையில் இதுபோன்ற பிளாஷ் மீடியா மென்பொருட்கள் கிடைப்பதால் நோக்கியா மற்றும் பிற உபகரண உற்பத்தியாளர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் வேகமாக டவுன்லோடு செய்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ஒபேரா மொபைலின் இந்த வடிவம் வேகமாக டவுன்லோடு செய்யும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
இதனால் வெளிச் சந்தையில் கிடைக்கும் மென்பொருட்களைக் காட்டிலும் வர்த்தக ரீதியாக இதுவே வெற்றி பெறும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

No comments: