சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் எஸ். சேகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் உத்தரவுப்படி பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார்.
300 யோகா பயிற்றுனர்கள் உதவியுடன், தமிழகத்தில் உள்ள தனியார், அரசு பள்ளிகளில் பணி புரியும் 1.10லட்சம் ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்காக ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
வரும் கல்வி ஆண்டில் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் யோகாவுக்கு தனி பாடவேளை ஒதுக்கப்பட்டு, அதில் யோகா கற்பிக்கப்படும் என்றும் இந்த கல்வி ஆண்டிலேயே இது செயல் படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி தினமும் யோகா பயிற்சியை மேற்கொள்வதாகவும், இதுதான் அவரது உடல் நலத்தின் ரகசியம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment