ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், ஐபோன்களில் வாடிக்கையாளர்கள் பல்வேறு தரப்பட்ட இசைகளையும், பாடல்களையும் கேட்டு மகிழ ஏதுவாக அந்த நிறுவனம் முக்கிய இசை நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் ஐட்யூன் இசை லைப்ரரியை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களுக்கு பிரிமியத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை கட்டுப்பாடற்ற இசையைக் கேட்பதற்கு, சுமார் 100 டாலர் வரையோ அல்லது மாதந்தோறும் 7 முதல் 8 டாலர் வரையோ அளிக்கத் தயாராக இருப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
என்றாலும் இசை நிறுவனங்களுடன் பேச்சு குறித்து, ஆப்பிள் இங் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment