Search

Custom Search

Monday, March 31, 2008

குடிபோதை வாகனம்: கிப்ஸ் கைதாகி விடுதலை ஹெர்ஷல் கிப்ஸ்

ஹெர்ஷல் கிப்ஸ்
தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் மது அருந்தி விட்டு, குடிபோதையில் வண்டி ஓட்டியதாக தென் ஆப்பிரிக்க துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் உடனடியாக 67.53 டாலர்கள் தொகை செலுத்தி ஜாமீனில் விடு‌வி‌க்க‌ப்பட்டார். என்றாலும் கிப்ஸ், வரும் ஜூன் 27-ம் தேதி கேப்டவுன் நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேப்டவுன் நகரின் கடற்கரைப் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 3.45 மணியளவில் கிப்ஸ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக அவர் சரியாக விளையாடதால் தென் ஆப்பிரிக்க் அணியின் நடப்பு இந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஏப்ரல் 18-ம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments: