![]() |
தமிழ்நாட்டில் ரஜினியின் தலை தெரிந்தாலே, திருவிழா கூட்டம் சேரும். பப்ளிக்கில் அவரை வைத்து படம் இயக்குவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?
எனவேதான், ஆந்திர எல்லையைத் தாண்டி ரஜினியின் படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால் குசேலன் படத்திற்காக ரஜினியை பொள்ளாச்சி அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பி.வாசு.
ஹைதராபாத்தில் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை, பொள்ளாச்சியில் தொடர திட்டமிட்டுள்ளார் இயக்குனர்.
ரஜினி, நயன்தாரா, பசுபதி, வடிவேலு ஆகியோர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
இதற்காக பொள்ளாச்சியை சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம் பகுதிகளில் லொகேஷன் பார்த்து வந்திருக்கிறது குசேலன் படக்குழு.
பாதுகாப்பு பிரச்சினையில்லாமல் ஷூட்டிங்கை நடத்தினால் சரிதான்.

No comments:
Post a Comment