Search

Custom Search

Monday, April 14, 2008

விளம்பரப் பலகைகள் 15 நாளில் அகற்றப்படும்

சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அனைத்தையும் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோன்ற விளம்பரப் பலைகளை அனைத்தும் அடுத்த 15 நாட்களில் அகற்றப்பட்டு விடும் என்று சென்னை மாநகர ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 15 ஆயிரம் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், கேஸ் வெல்டிங் எந்திரங்களைக் கொண்டு இரவு நேரங்களில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவை அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

No comments: