Search

Custom Search

Wednesday, April 2, 2008

தமிழர்களுக்கு தனி நாடு: விக்ரமநாயகே கருத்து

இலங்கையில் இருந்து தமிழர்களுக்காக தனியாகப் பிரித்து தனி மாகாணத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ஒருவர் முதல் முறையாக இஸ்ரேலுக்குச் சென்றுள்ள நிலையில், ஜெருசலமில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதுபோன்று தனி மாகாணம் உருவாக்குவது இந்தியாவில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இலங்கையின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை தொடர இந்தியா எப்போதும் விரும்புவதாகவும் விக்ரமநாயகே கூறினார்.
இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழர்களுக்கென்று தனிநாட்டை உருவாக்க எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் விரும்புவதாகவும் இலங்கை பிரதமர் குறிப்பிட்டார்.
சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவே விரும்புவதாகவும், ராணுவ ரீதியான தீர்வை கோரவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments: