தமிழகம், கர்நாடகா இடையிலான பதற்றம் தணிந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி அருகே தமிழக பேருந்துகளை விஷமிகள் சிலர் தாக்கி சேதப்படுத்தினர்.
ஓசூரில் இருந்து பெங்களூருக்கு நகருக்கு நேற்றிரவு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கர்நாடக எல்லையில் உள்ள பொம்மனஹள்ளி என்ற இடத்தை அடைந்தபோது, விஷமிகள் சிலர் பேருந்தை தாக்கினர்.
இதில் பேருந்தின் கண்ணாடிகள், முகப்பு விளக்குகள் சேதமடைந்தன. நள்ளிரவு நேரத்தில் உள்ளே இருந்த பயணிகள் பீதியுடன் கீழேயிறங்கி செய்வதறியாது திகைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, பயணம் தொடர ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அங்கு சென்ற தமிழக அரசு பேருந்துகளும் சூறையாடப்பட்டன.
தற்போது பதற்றம் தணிந்து சுமூக சூழ்நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment