Search

Custom Search

Monday, April 14, 2008

புல்லட் ரயில் குறித்து பரிசீலனை- ஆர். வேலு

நாட்டில் புல்லட் ரயில்களை அறிமுகம் செயவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்த ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு கூறியிருக்கிறார்.
வேலு}ரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்லட் ரயில்களை இயக்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என்பதோடு பயண நேரமும் குறையும் என்று கூறினார்.
அங்கோலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு டீசல் எஞ்சின், நீராவி எஞ்ஜின் உள்ளிட்ட ரயில் என்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
காட்பாடி வழியாக தற்போது நெல்லைக்கு வாரம் ஒருமுறை இய்ககப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: