Search

Custom Search

Wednesday, April 2, 2008

உண்ணாவிரதத்தில் ரஜினி பங்கேற்கிறார்?

ரஜினிகாந்த்
கன்னட அமைப்புகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலம் சார்பில் 4ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தற்போது அவர் சென்னை வந்துள்ளதாகவும், ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக- கர்நாடக மாநிலங்கள் இடையே ஒகேனக்கல் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் தத்தமது மாநிலங்களுக்கு ஆதரவாக இரு மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத் துறையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவரான நடிகர் ரஜினிகாந்துக்கு இவ்விவகாரம் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் கன்னட ஆதரவாளர் என்ற முத்திரை அவருக்கு குத்தப்படும்.
மேலும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தமிழ் உலகுக்கு ஆதரவாகவே எப்போதும் இருக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே 4ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்தில் அவர் கலந்து கொள்வது உறுதி என்று கூறப்படுகிறது.
காவிரி நதிநீர் பிரச்சனையில் திரையுலகத்தினர் குதித்தபோது ரஜினியும் கலந்து கொண்டார்.
எனினும், நெய்வேலியில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம் நடத்தியபோது சென்னை சேப்பாக்கத்தில் ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: