தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் எத்தனை வளர்ச்சி கண்டாலும், மனிதனின் மறாத சில உணர்வுகளுக்கு வடிகால் இல்லை என்பதே எதார்த்தம்.
ஆம்! தற்கொலை எண்ணங்களை விமர்சனம் செய்து அந்த எண்ணங்களை மறையச் செய்யும் இணைய தளங்களை விட தற்கொலையை ஆதரித்து தூண்டும் இணைய தளங்களே அதிகம் புழக்கத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனின் பிரிஸ்டல், ஆக்ஸ்ஃபோர்ட், மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் இந்த கொடூரமான துன்பத்தை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வது எப்படி? அதாவது "ஹவ் டு கமிட் சூசைட்" என்று எந்த இணைய தேடல் எந்திரத்தில் நீங்கள் போட்டுத் தேடினாலும் தற்கொலையை ஆதரிக்கும் இணைய தளங்களே அதிகம் நமக்கு காணக் கிடைக்கிறது என்று இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தற்கொலை நடத்தைகளைத் தூண்டுவதில் சில இணைய தளங்களின் பங்கு குறித்து சமீப காலங்களாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தாலும், இந்த இணைய தளங்களை எவ்வாறு சுலபமாக ஒருவரால் அணுக முடிகிறது என்பது இதுவரை சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த இணையதளங்களில் எம்மாதிரியான தகவல்கள் காணக் கிடைக்கின்றன என்பதும் இன்னமும் பூடக்மாகவே உள்ளது.
தற்கொலை பற்றிய ஒரு சாதரண தகவல் குறித்த சாதாரண தேடல் எந்திர நடவடிக்கை மூலம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது மொத்தம் 240 இணைய தளங்கள் காணக்கிடைத்துள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தற்கொலை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு 5 இணைய தளங்களிலும் ஓரிரு இணைய தளங்கள் தற்கொலை இணைய தளங்களாகவே இயங்கி வருகின்றன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும்மேல் தற்கொலைகளை தூண்டுபவையாகவும், தற்கொலை செய்து கொள்வது பற்றியும் விளக்கியுள்ளன என்று கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வு.
12 சதவீத இணையதளங்களே தற்கொலையை கடுமையாக எதிர்த்து எழுதியுள்ளன.
இந்தியாவில் தற்போது 4.2 கோடி பேர் இணைய தளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 4 லட்சம் பேர் தற்கொலை முயற்சி செய்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதில் எத்தனை தற்கொலைகளையும், எத்தனை தற்கொலை முயற்சிகளையும் இது போன்ற இணையதளங்கள் தூண்டுகின்றன என்பது ஆய்வுக்குரிய விஷயமே.
மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தகவல் தொழில் நுட்பம் தனது பங்கினை திறம்பட செலுத்தி வருகிறது. ஆனால் தற்கொலையிலும் அது ஆட்சி செலுத்துகிறது என்பது… "சாரி! ரொம்ப டூ மச்!"
No comments:
Post a Comment