
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஸ்மிதா சென்னுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய டெல்லி வாலிபரை, மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வந்ததால், மும்பை கார் (Khar) காவல்நிலையத்தில் சுஸ்மிதா சென் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்து வந்த கார் போலீசார், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவர் டெல்லியை சேர்ந்த ஆம்பர் பிபிச்சர் என்று கண்டறிந்தனர். இதையடுத்து இன்று டெல்லி சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் பி.காம் படித்து வந்ததுடன், பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்ததும், டெல்லியின் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் மும்பை கொண்டு வரப்பட்ட ஆம்பர், பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக கார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இவர் ஏற்கனவே சுஸ்மிதா சென்னுக்கு அனுப்பிய கூரியரில், பல ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment