Search

Custom Search

Sunday, April 20, 2008

மானிட்டர் இடம் எவ்வாறு இருந்தால் சரி?

நம்மில் பலர் தற்போது கணினிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் அதனை முறையான வழியில் செய்கிறோமா என்று பார்த்தால் வெகுசிலரே தங்கள் கண்கள், கழுத்து உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு செய்கின்றனர் எனலாம்.
கணினித் திரையை (மானிட்டர்) சரியான இடத்தில் நீங்கள் வைக்கவில்லையென்றால் கழுத்து வலி, கண் உபாதைகள் தோன்றுகின்றன.
முதலில் கணினித் திரையை உங்களுக்கு நேராக வைத்திருக்க வேண்டும். அது சற்றே வலது புறமாகவோ, இடதுபுறமாக்வோ இருந்தால் உங்களுக்கு நாளடைவில் கழுத்து வலி ஏற்படும். தோள் பட்டைகளிலும் வலி ஏற்படலாம்.
முடிந்த அளவு பார்வைக்கு தெரியும் தூரத்திலாவது கணினித் திரையை அமைத்துக் கொள்ள வேண்டும். பெரிய திரை கிடைத்த பாக்கியவான்கள் இன்னமும் நன்றாக பின்னால் உட்கார்ந்து பணியாற்றலாம். குறைந்தது கைக்கெட்டும் தூரத்தை விடவும் சற்றே தள்ளி அமர்ந்து இயங்குவதுதான் கண்களுக்கு அயற்சியை உருவாக்காது.
மானிட்டரைக் காட்டிலும் நீங்கள் ஒரு 2 அல்லது 3 இன்ச் உயரத்தில் இருந்து இயங்கினால் கண்கள் பாதிப்புக்குள்ளாகாது. கணினித் திரை ரொம்பவும் தாழ்வாக இருந்தால் கழுத்தை நீட்டி நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். சரி அதிக உயரத்திலிருந்தால் உங்கள் கழுத்தை பின்னால் சாய்த்து பார்க்க வேன்டும், இதனால் ஏற்படுவது கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள். மேலும் இதனால் தலைவலியும் அதிகமாக வரலாம்.
கணினித் திரையை சற்றே மேலே உயர்த்தவும். இதனால் அடிப்பகுதி உங்களுக்கு அருகில் இருக்கும். இதன் மூலம் கழுத்தை அசைக்காமல் முழுத் திரையும் உங்களுக்கு தெரிய வரும். கணினித் திரையை கிழாக சாய்ப்பது ஒரு போதும் கூடாது.
கணினித் திரையில் நாம் செய்யும் இந்த அட்ஜஸ்மென்ட்கள் முக்கியமானது ஏனெனில் அலுவலகத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சங்களின் தன்மையாலும் திரையை தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கண்களில் உள்ள நீர் வற்றி விட வாய்ப்பு உள்ளது. இதனால் குழம்பிய ஒரு பார்வை ஏற்படலாம்.
அதேபோல் உங்கள் திரைகளில் வேறு ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு தெரிவதும் கூடாது. ஏனெனில் நாம் உடனே ஒரு கண்ணால் பார்க்கத் துவங்குவோம். எனவே அறை வெளிச்சம் சரியானதாக இருக்க வேண்டும்.
சமச்சீரற்ற வெளிச்சத்தில் நாம் கணினித் திரையை பார்த்தோமானால் தலைவலியும், பார்வைக் கோளாறுகளும் ஏற்படும்.
அதேபோல் இயற்கை வெளிச்சத்தில் பணியாற்ற நேர்ந்தால் கணினித் திரையின் வெளிச்சத்தை நாள் முழுதும் மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானதும் அடிப்படையானதும் கணினித் திரையை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதில் உள்ள அழுக்குகளால் நம் பார்வை பழுதடைவதுதான் மிச்சமே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை.
மானிட்டர் மட்டுமல்ல கணினி குறித்த எந்த செயல்பாடாயிருந்தாலும் அதற்கான வழி முறைகளை கடைபிடித்தால் நீண்ட நாளைய பயன்பாட்டினால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்க்கலாம்.
அதேபோல் ஒவ்வொரு 20 நிமிட வேலைக்குப் பின்னும் ஒரு 20 அல்லது 30 வினாடிகள் கணினியைத் தவிர்த்து வெளியில் நீண்ட தொலைவுகளில் பார்வையை செலுத்தி விட்டு வருவது நல்லது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்போம். கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்ப்போம்.

1 comment:

ashok kumar said...

what a good topic iam very proud of you enna ma arif how are uuuuuuuuuuuuuu