ஒகேனக்கல் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளியன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கலந்து கொள்கிறது.
இதேபோல், சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் எவ்வித சினிமா படப்பிடிப்போ அல்லது அதுதொடர்பான மற்ற பணிகளோ நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வெள்ளிக்கிழமை அன்று மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment