
சென்னை மாநகர காவல் துறை ஆணையகத்தை பிரித்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு என்று தனி ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருச்சிராப்பள்ளி நகரில் புதிய காவல் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். இவ்வாண்டில் ரூ. 110 கோடி செலவில் 2,000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு, புதியதாக சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழுநேர காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். இதன்படி மாநிலத்தில் உள்ள 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, கம்பம், காரைக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.சென்னை அருகே செம்மஞ்சேரி மற்றும் வேலூர் மாவட்டம் அரியூரில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
No comments:
Post a Comment