Search

Custom Search

Saturday, May 24, 2008

'மானிய விலையில் பிராட்பேண்ட் இணைப்பு'


ஆ.ராசா
பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மானிய விலையில் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.
கிராமப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.
கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைத்திருப்பதாகவும், மிகவும் பின் தங்கிய பகுதியில் இருக்கும் 14,183 கிராமங்கள் கண்டறியப்பட்டு அங்கு தொலைப்பேசி இணைப்புகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் மாதம் ஒன்றுக்கு 80 லட்சம் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், வரும் 2010-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றார்.
பிரபல தேடுதல் சேவை நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் கூகிள் எர்த் என்ற சேட்டிலைட் இமேஜ் வடைபட சேவைக்குப் போட்டியாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ சேட்டிலைட் வரைபட சேவையை வழங்க உள்ளது.
இஸ்ரோவின் சேட்டிலைட் சேவை அடுத்த 6 மாதத்தில் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இமேஜ் (படங்கள்) அனைத்தும் இஸ்ரோவின் இணைய தளங்களில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கருதப்படும் பகுதிகள் இமேஜாக வெளியிடுவதற்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கும் என்றும், ஏனைய இமேஜ் அனைத்தும் இணையத்தில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான ரிமோட் சென்சிங் சேட்டிலைட்டுகளை கொண்டிருப்பது இந்தியா என்றும் அவர் கூறினார்.

No comments: