தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்திருப்பதால், மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
அதிகபட்சமாக சோழவந்தானில் 5 செ.மீட்டர் மழை பெய்தது. மணப்பாறை, நன்னிலம், கரூர், பரமத்தி, திருப்பத்தூர், திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டரும், திருவாரூரில் 2 செ.மீட்டரும் மழை பெய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில், ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கும்.
கத்திரி வெயில் முடிவடைவதற்கு ஒரு சில நாட்களே உள்ளதால், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment