அகண்ட அலைவரிசை இணையதள (பிராட்பேண்ட்) இணைப்பு வைத்துள்ளவர்கள் வீட்டில், டிவி பெட்டிகளை விட கணினிகளே அதிக நேரம் பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஸ்கோ என்ற நிறுவனம் சார்பில், பிராட்பேண்ட் இணைப்பு உள்ளவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு வார காலத்தில் அவர்கள் வீட்டில் உள்ள கணினிகள் 22 மணிநேரம் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அதே காலத்தில் அவர்களது டிவி பெட்டிகள் 14 மணி நேரம் மட்டுமே இயங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி இணையதளத்தில் தாங்கள் விரும்பிய திரைப் படங்களை பதிவிறக்கம் செய்வது, கண்டு ரசிப்பதுமே இதற்கு காரணம் என சிஸ்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 864 வீடுகள் மற்றும் நியூசிலாந்தின் 219 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இணையதளத்தில் குறும்படங்கள் மற்றும் பிற திரைப்படங்களை காண்பது மிகவும் வசதியாக (விளம்பரங்கள் தொல்லையின்றி) உள்ளதால் இணையத்தில் படம் பார்ப்பதை விரும்புவதாக ஆய்வில் பங்கேற்ற 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டிலும் இதேநிலை ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி சாத்தியமானால் தற்போதைய டிவி சேனல்களுக்கு போட்டியாக இணையதளங்களும் கவர்ச்சிகர விளம்பரங்களை ஒளிபரப்பலாம்.
இதே சில சாம்பிள்கள்... 'உலக இணையதள வரலாற்றில் முதன் முறையாக'... அல்லது 'லெஸி வித் மீனூ' என்பது போன்ற விளம்பரங்களும் உங்கள் கணினி திரையில் துள்ளி விளையாடலாம்...
No comments:
Post a Comment