Search

Custom Search

Thursday, May 29, 2008

ரீமிக்ஸ் பாடலால் பெருமையில்லை- பரத்வாஜ்

இசையமைப்பாளர் பரத்வாஜ்
ரீ-மிக்ஸ் பாடல்கள் சமீப காலமாக தமிழ்ப் படங்களில் அதிக அளவில் இடம்பெற்று வரும் நிலையில், அதுபற்றி பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் அளித்த பேட்டி....
ரீமிக்ஸ் பாடல்களை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ரீமிக்ஸ் பாடல்கள் தேவையில்லை. அதனால் இசையமைப்பாளருக்கு எந்தப் பெருமையும் இல்லை. எனவே அதுபோன்ற பாடல்களில் எனக்கு உடன்பாடில்லை.
பழைய படங்களின் கதையுடன் வெளியாகும் படங்களுக்கு அவசியம் இல்லையா?
அஜீத்தின் `பில்லா' போன்ற படத்துக்கு ரீமிக்ஸ் பாடல் அமைத்ததை நான் வரவேற்கிறேன். காரணம், பழைய படத்தின் கதை, அதே சூழ்நிலை இருப்பின் ரீமிக்ஸ் பாடல் கம்போஸ் செய்யலாம்.
ஆனால் முன்பு ஒரு படத்தின் கதை, சூழலுக்காக உருவாக்கப்பட்ட பாடலை, இப்போது புதுப்படங்களில் பயன்படுத்துகிறார்கள். அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.
ரீமிக்ஸ் பாடலால் ஏற்படும் பாதிப்பாக எதை கருதுகிறீர்கள்?
ரீமிக்ஸ் பாடல்களுக்காக பழைய பாடகருக்கோ, இசையமைப்பாளருக்கோ, பாடலாசிரியருக்கோ எந்தவித சன்மானமும் வழங்கப்படுவதில்லை. புதிய பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
உங்கள் படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் அமைப்பீர்களா?
முடிந்தவரை ரீமிக்ஸ் பாடல்களை தவிர்ப்பேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் வற்புறுத்தும் பட்சத்தில், அதை மீற முடியாது என்று பரத்வாஜ் கூறினார்.

No comments: