Search

Custom Search

Friday, July 4, 2008

ஏப்ரலில் 'கேப்டன் டிவி': பிரேமலதா

தேமுதிக சார்பில் வரும் ஏப்ரல் மாதம் கேப்டன் டிவி துவக்கப்படும் என்று, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை திரிசூலத்தில் இன்று நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள் மூலம் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற அவர், விலைவாசி உயர்வால் ஏழை- நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை விஜயகாந்த் நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும், மக்களின் முன்னேற்றத்திற்கான வழி அவருக்கு தெரியும் என்றும் பிரேமலதா குறிப்பிட்டார்.

தைரியம் இருந்தால் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்று சவால் விட்ட பிரேமலதா, தேமுதிகவிற்காக அதிகாரபூர்வ 'கேப்டன் டிவி' வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

No comments: