Search

Custom Search

Tuesday, July 22, 2008

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் நாளை துவக்கம்!



[Cricket team]
இலங்கைக்கு
சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக
கொழும்பு நகரில் நாளை துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.


இந்திய
அணியில் கவுதம் கம்பீர், சேவாக், ‌திராவிட், சச்சின், கங்கூலி, ல‌ஷ்மண்,
தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், ஜாகீர்கான், அ‌ணி‌த் தலைவ‌ர் கும்ப்ளே,
முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இலங்கை
அணியில் மைக்கேல் வன்டர்ட், மலின்டா வர்னபுரா, சங்கக்காரா, அ‌‌ணி‌த்
தலைவ‌ர் ஜெயவர்த்னே, சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்சான், பிரசன்ன
ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா,
நுவான் குலசேகரா, சமர கபுகேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


போட்டி
நாளை காலை 10.15 மணிக்கு துவங்‌கு‌கிறது. இலங்கையின் இளம் சுழற்பந்து
வீச்சாள‌ர் மெ‌ண்டிஸை, இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ள உள்ளனர், டெஸ்ட்
போட்டிகளில் அதிக ரன் எடுத்த லாராவின் சாதனையை சச்சின் மு‌றியடிப்பாரா
என்று இந்திய ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

No comments: