Search

Custom Search

Saturday, August 30, 2008

அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி, சோனியா!

உலகளவில் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலை அமெரிக்காவின் பிரபல இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கெல் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க பெடரல் காப்பீட்டு வைப்பு நிதியத்தின் தலைவரான ஷீலா பெய்ர் 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக நலிவடைந்து வருவதைத் தொடர்ந்து இவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவ‌ழியைச் சேர்ந்தவரும், பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் தலைவருமான இந்திரா நூயி 3வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவின் வெல் பாயின்ட் நிறுவன தலைவர் ஏஞ்சலா பிராலி, இங்கிலாந்தின் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சிந்தியா கரோல், அமெரிக்காவின் கிராஃப் புட்ஸ் தலைவர் ஐரின் ரோஸன்பெல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு வெளியான பட்டியலில் 3ஆம் இடம் பிடித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரான காண்டலீஸா ரைஸ், தற்போது 7வது இடத்திற்கு பின்தங்கினார். புஷ் அரசின் ஆட்சிக் காலம் வரும் நவம்பரில் முடிவடைய உள்ளதால் காண்டலீஸாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு 21வது இடம்: காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு 2008ஆம் ஆண்டு பட்டியலில் 21வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மாபெரும் தேசிய கட்சியான காங்கிரசுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தலைவராக பதவி வகித்து வரும் சோனியா, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடு‌த்து வருவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சோனியாவுக்கு நிகரான பெண்மணியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ‌விள‌ங்‌கி வருவதாகவும், காங்கிரஸின் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்காக மாயாவதி, பா.ஜ.க.வுடன் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவருக்கு கூடுதல் பலத்தை அளி‌ப்பதாக கூறப்பட்டுள்ளது.

நா‌ட்டி‌ன் முத‌ல் இணைய தள டி.‌வி. ராஜ‌ஸ்தா‌னி‌ல் அ‌றிமுக‌ம்!

நமது நா‌ட்டி‌ன் முத‌ல் ஐ.‌பி.டி.‌வி. (இணைய தள டி.‌வி.) ‌ரா‌ஜ‌ஸ்தா‌ன் மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த கிராம‌ப் புற‌த்‌தி‌ல் அ‌‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஆகா‌ஷ் க‌ண்ணாடி இழை கே‌பி‌ள் ‌நிறுவனமு‌ம், ‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல் ‌நிறுவனமு‌ம் இணை‌ந்து த‌ங்களது ஐ.‌பி.டி.‌வி. சேவையை ராஜ‌ஸ்தா‌‌ன் தலைநக‌ர் ஜெ‌ய்‌ப்பூ‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள கு‌ல்கா‌ஸ் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் செ‌ய்து‌ள்ளன.

‌சில வார‌ங்க‌ளு‌க்கு மு‌ன்பு ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் ம‌ட்டு‌ம் த‌ங்களது ஐ.‌பி.டி.‌வி. சேவையை‌த் துவ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்‌திரு‌ந்த இ‌ந்த இர‌ண்டு ‌நிறுவன‌ங்களு‌ம், த‌ற்போது ராஜ‌ஸ்தா‌னி‌ன் மு‌க்‌கிய நகர‌ங்க‌ள் அனை‌த்‌தி‌ற்கு‌ம் அ‌ந்த‌ச் சேவையை ‌வி‌ரிவுபடு‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன.

இ‌ந்த‌ச் சேவையை‌ப் பெறு‌ம் ம‌க்க‌ள், ‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். ‌நிறுவன‌த்‌தி‌ன் அக‌ண்ட அலைவ‌ரிசை (‌பிரா‌ட் பே‌ண்‌ட்) இணை‌ப்பு மூலமாக‌த் தா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் 120 சேன‌ல்களையு‌ம், ‌திரை‌ப்பட‌த் தொகு‌ப்பையு‌ம் பா‌ர்‌க்க முடியு‌ம்.

ரூபாயின் பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!

காய்கறிகள், இறைச்சி, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால், தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.40 விழுக்காடாக குறைந்துள்ளது.

இது பணவீக்கம் தொடர்ந்து குறையப் போவதற்கான ஆரம்ப அறிகுறி என்று கூறியுள்ள நிதி அமைச்சக அறிக்கை, அத்யாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ள 98 பொருட்களில் 21 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது, 48 பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை, மீதமுள்ள 29 பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 3.99 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகள் மட்டுமின்றி, முட்டை, மீன், எரிபொருள் ஆகியவற்றின் விலைகளும் 1 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது.

பருப்பு வகைகள், பழங்கள், மசாலா பொருட்கள், எஃகு மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது.

Wednesday, August 27, 2008

வா‌ல்பாறை‌யி‌‌ல் 9 செ.‌மீ மழை!

த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று உ‌ட்புற பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து‌ள்ளது. வா‌ல்பாறை‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 9 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக பெ‌ன்னாகர‌‌த்த‌ி‌ல் 8 செ.‌மீ மழையு‌ம், கரூ‌ரி‌ல் 7 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

குமாரபாளைய‌த்‌தி‌ல் 4 செ.‌மீ மழையு‌ம், ச‌ங்கராபுர‌ம், நாம‌க்க‌ல், கு‌ன்னூ‌ர், அரவ‌‌க்கு‌றி‌ச்‌சி, உ‌த்தமபாளைய‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் 3 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌‌‌ட்க‌ளி‌ல் த‌‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நடிகை ர‌ம்பா த‌ற்கொலை முய‌ற்‌‌சி? மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!

பிரபல நடிகை ரம்பா செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மருத்துவமனையில் நே‌ற்று அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌த்த‌ி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்படு‌கிறது.

ஒரு கால‌த்‌தி‌ல் த‌மி‌‌‌ழ்‌த் ‌திரையுல‌கி‌ல் மு‌ன்ன‌ணி கதாநாய‌கியாக ‌திக‌ழ்‌ந்தன‌ர் நடிகை ர‌ம்பா. இ‌வ‌ர் ‘த்ரீ ரோசஸ்’ என்ற படத்தை தயாரித்தார். அ‌ந்த பட‌‌த்‌தி‌ல் அவரு‌க்கு ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மீண்டும் தமிழ் பட உலகிற்கு திரும்பிய ரம்பா, ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் கலைஞர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்பா நேற்று கவலைக்கிடமான நிலையில் வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அவர் தீவிர சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டினார். அவர் சாப்பிட்ட உணவில் விஷதன்மை இருந்ததால், வயிற்று கோளாறு ஏற்பட்டு அவர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்களும்,மருத்துவமனை வட்டாரமும் தெரிவித்தன.

ஆனா‌ல் நடிகை ர‌ம்பா ‌விஷ‌ம் குடி‌த்து த‌ற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌ங்க‌ளி‌ல் செ‌ய்‌தி பர‌வியது.

இத‌னிடையே மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்கும் சக நடுவர்களான டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை குஷ்பு மற்றும் நடனம் ஆடுபவர்கள் என பலர் ரம்பாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Monday, August 25, 2008

சிரஞ்சீவி கட்சி நாளை உதயம்!

திருப்பதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது கட்சியின் பெயரை வெளியிட்டு, முறைப்படி அரசியலில் களமிறங்குகிறார்.

இதற்கென திருப்பதி அவிலாலாவில் மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் அறிவிக்கவுள்ளார்.

மாநாட்டுக்கான இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு மேடையில் நடைபெறுவனவற்றை கடைசியில் உள்ளவர்களும் தெளிவாகப் பார்க்கும் வகையில் மாநாட்டு பந்தலில் பிரம்மாண்ட திரைகள் வைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

பொதுக் கூட்டத்திற்கு வரும் ரசிகர்களின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவையனைத்தும் ரேணிகுண்டாவில் நிறுத்தப்படும். இதேபோல் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகளையும் ஆந்திர அரசு இயக்குகிறது.

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் அங்குள்ள அரசியல் கட்சிகளிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசம், மாநாடு தொடர்பான செய்திகளை அம்மாநில ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

30,000 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை இணைப்பு!

பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தொலைபேசி இணைப்பு இல்லாத 54,700 கிராமங்களுக்கு மானிய விலையில் புதிதாக ‌கிராம பொது தொலைபேசிக‌ள் (VPTs) இணைப்பு வழங்கியுள்ளது.

இதனுடன் சேர்த்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடெங்கிலும் உள்ள 51/2 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பை அளித்துள்ளது. மேலும் 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை (Broadband) இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இணைப்பு இல்லாத 66,822 கிராமங்களுக்கு மானிய விலையில் பொது தொலைபேசி வசதியை அளிப்பதே பாரத் நிர்மாண் திட்டத்தின் இலக்காகும். ‌மீதமு‌ள்ள ‌கிராம பொது தொலைபே‌சிக‌ள் இணை‌ப்பு இ‌ந்த ஆ‌ண்டு இறு‌தி‌க்கு‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந்‌த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் ம‌க்க‌ள் தொகை 100‌‌க்கு‌ம் குறைவாக உ‌ள்ள ‌கிராம‌ங்க‌ள் த‌விர ம‌ற்ற அனை‌த்து ‌கிராம‌ங்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம்.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை‌ப் பயன்படுத்தி சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு கிராம பொது தொலைபேசிகள் இணை‌ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Friday, August 22, 2008

இணைய வழி தொலைக்காட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இணையத்தின் வழியாக தொலைக்காட்சி (Inter protocol Television-IPTV) சேவைகளை வழங்க வகைசெய்யும் ஒளிபரப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் சேவைகளை அதிவேக இணையத் தொடர்பை பயன்படுத்தி வணிக ரீதியாக சேவை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களான பார்த்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியன இச்சேவையை அளிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் மட்டுமின்றி இணையத்தின் வாயிலாக கணினியிலேயே கண்டுகளிக்கலாம். அதற்கும் தொலைக்காட்சி வரிசைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நெறிமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரி பயங்கரவாதம்: ‌சிவரா‌ஜ் பாட்டீல் எச்சரிக்கை!

உயிரி பயங்கரவாதத் தாக்குதல் சா‌த்‌திய‌ம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் தயாரித்து வழங்கிய உயிரியல் பேரழிவு மேலாண்மை மீதான தேசிய அளவிலான வழிகாட்டிகளை வெ‌ளி‌யி‌ட்டு பே‌சிய பா‌ட்டீ‌ல், உ‌யி‌ரி பய‌ங்கரவாத‌ம் சவால்களை சந்திக்க மத்திய மா‌நில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார்.

மனிதனை அழி‌க்கு‌ம் உத்தியாக உயிர் தொழில் நுட்ப‌‌ம் பயன்பட‌க்கூடிய ஆபத்தையும், இதற்காக மரபணுவியலை ஒரு ஆயுதமாக பயன்படு‌த்த முடிவதற்கான சாத்தியத்தையும் அவர் வலியுறுத்தி எச்சரிக்கை செய்தார்.

இந்த நவீன பயங்கரவாத‌ம், இயற்கை பேரழிவுகளை சந்திக்க மத்திய மா‌நில அரசுகளு‌க்கு இடையேயும், மா‌நிலத்திற்குள் உள்ளூர் அமைப்புக‌ளு‌க்கு இடையேயு‌ம் ஒருங்கிணைப்பு வலு‌‌ப்பட வே‌ண்டியத‌ன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

உயிரியல் பேரழிவு மேலாண்மை மீதான தேசிய அளவிலான வழிகாட்டி‌யி‌ல், சுகாதாரம், உடனடியான ‌சி‌க்க‌ல்க‌ள் மற்றும் பாதிப்பு, மன ஆரோக்கியம், உளவியல் ஆதரவு, சவால்களை சந்திக்க சமூக அளவிலான விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Wednesday, August 20, 2008

அடுத்த என் இலக்கு இந்திப் பட உலகம்!

தாணு தயாரிப்பில் வளர்ந்துவரும் பிரமாண்டமான படம் 'கந்தசாமி'. இயக்குனர் சுசிகணேசன் இயக்க விக்ரம் நடிக்கிறார். பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து இந்திப் பட உலகில் இறங்க இருக்கிறார் விக்ரம். மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அந்தப் படத்தில்தான் விக்ரம் முக்கியமான அதாவது அபிஷேக் பச்சனுக்கு இணையான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அதே படத்தை தமிழிலும் இயக்கவிருக்கிறார் மணிரத்னம். அதில் ஹீரோவாக, ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் ஹீரோவாக நடித்துவிட்டு, இந்தியில் முதன் முதலில் நடிக்கும் படத்தில் ஹீரோயில்லாமல் வேறு கேரக்டரில் நடிப்பது பற்றி கொஞ்சம் கூட தனக்கு கவலை இல்லை என்கிறார் விக்ரம்.

மிகப்பெரிய இயக்குனர் மணிரத்னம், மிகப்பெரிய ஹீரோ அபிஷேக் பச்சன். அதேபோல உலக அழகியும், அமிதாப் பச்சனின் மருமகள். இப்படி மூன்று சிறப்புகளும் கொண்டுள்ள படத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்கிறார். 'கந்தசாமி' கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. நினைத்தபடி படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர்.

அதேபோல, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை படம் நன்றாக வரவேண்டுமென்று அதிக பட்ஜெட் செலவு செய்து தயாரித்து வரு‌கிறார் தாணு. அத்தோடு... அடுத்த மாதம் தன் மகன் இயக்கும் சக்கரக்கட்டி படமும், அதற்கடுத்து தீபாவளிக்கு கந்தசாமியும் ரிலீஸாக உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.

சிறந்த தொழில்நுட்பம் அறிமுகம்!

சென்னையில் உள்ள சத்யம் மல்டிஃபிளக்ஸ் தியேட்டர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. எப்படிப்பட்ட படங்களையும் அங்கே பார்த்தால் அதன் தரம் தனியாக உள்ளது.

மும்பை, ஐதராபாத் தியேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இத்திரையரங்கில் தற்போது 3டி எனும் தொழில்நுட்பத்துடன் படங்களைத் திரையிட இருக்கிறார்கள். இதற்காக தென்கொரியாவின் மாஸ்டர் இமேஜ், இன்சைட் மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆர்.டி.எக்ஸ்.-3டி படங்களைக் கொண்டு வருகின்றனர்.

இதற்கு மு‌ன்னால் வந்த 3டி படங்களுக்காக தனியாக கிராஃபிக்ஸ் செ‌ய்து அதை மட்டும் கண்ணாடி வழியாக தெரியும்படி காட்டினார்கள். ஆனால், தற்போது மொத்தப் படத்தையும் 3டி எ·பெக்டில் துல்லியமான ஒலியுடன் தெரியும்படி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நடப்பது போல தத்ரூபமாக தெரியும்.

படம் பார்க்கிறோம் என்பது இல்லாமல் நேரில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார் சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி.

Monday, August 18, 2008

செ‌ன்னை, கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌ங்க‌ள் ‌வி‌ரிவா‌க்க‌ம்!


செ‌ன்னை, கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌ங்க‌ளூ.3,750 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல் ‌வி‌ரிவா‌க்க‌மசெ‌ய்தந‌வீன‌ப்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவை‌ ஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌மூ.1,808 கோடி‌யிலு‌ம், கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌மூ.1,942.51 கோடி‌யிலு‌ம் ‌வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்டந‌வீன‌ப்படு‌த்த‌ப்பஉ‌ள்ளன. இ‌‌ந்‌திய ‌விமான ‌நிலைஆணைய‌மமே‌ற்கொ‌ள்ளவு‌ள்இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு, ‌பிரதம‌ரதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காஅமை‌ச்சரவை‌ககுழு‌வி‌லஒ‌ப்புத‌லவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்ட ‌பிறகு‌மஇ‌ந்இர‌ண்டு ‌விமான ‌நிலைய‌ங்களு‌மஇ‌ந்‌திய ‌விமான ‌நிலைஆணை‌த்‌தி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டிலேயஇரு‌க்கு‌மஎ‌ன்று‌ம், ‌வி‌ரிவா‌க்க‌பப‌ணிக‌ளசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மதுவ‌ங்கு‌மஎ‌ன்று‌மம‌த்‌திய ‌விமான‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ர் ‌பிரபு‌‌லபடே‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க, ந‌வீனமயமா‌க்க‌லப‌ணிக‌ள் 26 மாத‌ங்க‌ளி‌லமுடிவடையு‌மஎ‌ன்று‌ம், கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌‌பப‌ணிக‌ள் 30 மாத‌ங்க‌ளி‌லமுடிவடையு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌‌த்அமை‌ச்ச‌ர், ச‌ர்வதேச‌ததர‌த்‌தி‌ற்கு ‌பிநா‌ட்டு ‌விமான ‌நிலைய‌ங்களுட‌னபோ‌ட்டி‌யிடு‌மஅள‌வி‌ற்கஇ‌ந்த‌பப‌ணிக‌ளமே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

அடு‌த்த 20 ஆ‌ண்டுக‌ளி‌னதேவையை‌பபூ‌ர்‌‌த்‌தி செ‌ய்யு‌மவகை‌யி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வி‌ரிவா‌க்க‌பப‌ணிக‌ளமுடிவடையு‌ம்போது, டெ‌ல்‌லி, மு‌ம்பை ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கஇணையாஇ‌ந்இர‌ண்டு ‌விமான ‌நிலைய‌ங்களு‌ம் ‌திகழு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வி‌ரிவா‌க்க‌ப்படு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ், உ‌ள்நா‌ட்டு, அய‌ல்நா‌ட்டமுனைய‌ங்களு‌க்கு‌பபு‌திக‌ட்டட‌ங்க‌ளக‌ட்ட‌ப்படு‌ம். இர‌ண்டாவதஓடுதள‌ம் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌னஇர‌ண்டாவதஓடுதள‌ம் 832 ‌மீ‌ட்ட‌ர்க‌ள் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம். இதனா‌லஅத‌னஒ‌ட்டுமொ‌த்த ‌நீள‌ம் 2,917 ‌மீ‌ட்ட‌ர்களாஅ‌திக‌ரி‌‌க்கு‌ம்.

லஞ்சப் புகாரா? எஸ்எம்எஸ் போதும்!

மத்திய அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களை செல்பேசி குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கலாம் என்று மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) அறிவித்துள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 49224 என்ற எண்ணுக்கு, குறுந்தகவல்களை அனுப்பலாம் என்று ம.பு.க. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மீதான புகார்களை 044௨ - 8255899 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று, ம.பு.க. அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேருக்கு ம.பு.க. சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Friday, August 15, 2008

ரூ.20‌க்கு சா‌ப்பாடு வழ‌ங்க‌ப்படு‌கிறதா? க‌ண்கா‌ணி‌க்க அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தரவு!

''உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூபா‌ய் மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா எ‌ன்று‌ம் அ‌திகா‌ரிக‌ள் கண்காணிக்க வேண்டும்'' எ‌ன்று உணவு அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை தலைமைச் செயலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து உணவு அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு இ‌ன்று நடத்‌தினா‌ர். அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டும், விற்பனையாளர்கள் இருப்பு இல்லை என்று தெரிவிப்பதாக புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக அத்தகைய விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் விசாரணை செ‌ய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் வழங்க வேண்டும். 20 கிலோ அரிசி வழங்கப்படவேண்டிய குடும்ப அட்டைகளுக்கு அளவு குறைத்து வழங்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லை என்று புகார்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் விற்பனையாளர்கள் மீதும் தக்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், இதை கண்காணிக்கவும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வட்டத்திலும் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் போது பெறப்படும் புகார்களை உடனுக்குடன் தீர்வு செ‌ய்ய‌ப்பட வேண்டும். காலதாமதமின்றி புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

புதிய குடும்ப அட்டைகளை விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்றும் விலாசம் மாற்றம், பெயர் மாற்றம், மண்டல மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் / நீக்குதல் போன்றவைகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் அல்லது உரிய பதில் அனுப்பப்படவேண்டும். இப்பணிகளை சரியாக செ‌ய்யாத அலுவலர்கள் கடமை தவறியவர்களாக கருதப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உதவி ஆணையாளருக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்கள்.

போலி குடும்ப அட்டைகளாக இருக்கும் என்று கருதினால் முதலில் பொருள் நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் முறையீடு செ‌ய்ய வா‌ய்ப்பளிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு அலுவலர்கள் மீண்டும் விசாரணை செ‌ய்து போலி குடும்ப அட்டை தான் என்று உறுதிபடுத்தினால் அத்தகைய குடும்ப அட்டைகள் ரத்து செ‌ய்யப்பட வேண்டும்.

உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூபா‌ய் மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் எ‌ன்று அமை‌‌ச்ச‌ர் அ‌றிவுறு‌த்‌தினா‌ர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு: முதல்வர் அறிவிப்பு!

6வது சம்பளக் கமிஷன் அறிக்கையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியதைப் போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 62-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் இன்று காலை சுமார் 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. 8.08 மணிக்கு கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே முதல்வருக்கு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து தமிழக காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 8.30 மணியளவில் முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக அவருக்கு தலைமை செயலாளர் திரிபாதி முப்படை தளபதிகளையும், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி காவல்துறையினர் அணி வகுப்பை முதல்வர் பார்வையிட்டார்.

ஆயுதப்படை, பெண்கள் சிறப்புக்காவல் படை, நீலகிரி மாவட்ட சிறப்பு காவல்படை, கடலோர காவல்படை, சிறப்புக்காவல் படை, அதிரடிப்படை, பெண் அதிரடிப்படை ஆகியோரின் அணிவகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார். இதையடுத்து வீர தீர செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய முதல்வர், அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பும் கணிசமான பங்கு உள்ளது. அந்த பங்கின் விகிதத்தை அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கை உடையது இந்த அரசு.

எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கான 6-வது சம்பளக் கமிஷன் அறிக்கைபடி மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிடும் என்று அறிவித்தார்.

[Caption]

Tuesday, August 12, 2008

ஜப்பான் மொழிப் படத்தில் கமல், அசின்!

மீண்டும் கமலுடன்
அசின். இந்த முறை பரத்பாலா இயக்கும் படத்துக்காக. பரத்பாலா புரொடக்சன்
வால்ட் டிஸ்னியுடன் இணைந்து '19 ஸ்டெப்ஸ்' (19
Steps) என்ற படத்தை தயாரிக்கிறது. இந்தோ-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பான இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையாம்.

கேரளாவின்
பாரம்பரிய களரிச் சண்டையை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகிறது. களரி
கற்றுக் கொடுக்கும் ஆசானாக வருகிறார் கமல். அவரிடம் ஜப்பானிய இளைஞன்
ஒருவன் களரி கற்றுக் கொள்கிறான். இந்த இளைஞன் மீது மையல் கொள்கிறாள்
அப்பகுதியன் இளவரசி.


ஜப்பான் இளைஞனாக ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர் Tadanobu Asano நடிக்கிறார்.
இளவரசியாக அசின். எழுத்தாளர் எம்.டி. வாசுதேவனின் கதைக்கு ஹாலிவுட்
திரைக்கதை ஆசிரியர்கள் திரைக்கதை அமைக்கிறார்கள். ஆங்கிலம், இந்தி, தமிழ்,
தெலுங்கு மற்றும் ஜப்பான் மொழிகளில் இப்படம் தயாராகிறது. படத்தின் உத்தேச
பட்ஜெட் 50 மில்லியன் டாலர்கள்.


அடுத்த
வருடம் தொடங்கயிருக்கும் இப்படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இவரது
வந்தேமாதரம் வீடியோ ஆல்பத்தை தயாரித்தது பரத்பாலா என்பது
குறிப்பிடத்தக்கது.

நான் அஜித் ரசிகன் - சிம்பு!

சிலம்பாட்டம் கிளைமாக்ஸில் பில்லாவில் அஜித் அணிந்த அதே குளிர் கண்ணாடி, கோட், ஷூவில் தோன்றுகிறாராம் சிம்பு.

கிளைமாக்ஸில்
பில்ல அஜித் போன்று உடையணிந்து நடித்தால் நன்றாக இருக்கும் என
கூறியிருக்கிறார் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணன். மறுப்பேதும் சொல்லாமல்
உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு. காரணம் சிம்ப்பிள். இளைய தலைமுறை
நடிகர்களில் சிம்புவின் இதயம் கவர்ந்தவர் அஜித். நான் அஜித்தின் ரசிகன் என
பல பேட்டிகளில் சிம்புவே தெரிவித்துள்ளார்.


மன்மதன்
படத்தின் ஒரு காட்சியில் அஜித் வாழ்க, அல்டிமேட் ஸ்டார் தல வாழ்க என கோஷம்
கூட போடுவார். அவரிடம் அஜித் போன்று நடிக்கச் சொன்னால்...? பழம் நழுவி
பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் மகிழ்ந்து போனாராம்
சிம்பு.


பில்லா கெட்டப்பில் சிம்பு வரும் காட்சிகளில் பில்லா படத்தின் பின்னணி இசையையே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

பில்லாவுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா சிலம்பாட்டத்துக்கும் இசையமைப்பது கூடுதல் வசதி.

Monday, August 11, 2008

ஒ‌லி‌ம்‌பி‌க்: து‌ப்பா‌க்‌கி சுடுத‌ல் போ‌ட்டி‌யி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்றா‌ர் ‌இ‌ந்‌திய ‌வீர‌ர் பி‌ந்‌த்ரா!

சீன‌த் தலைநக‌ர் ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் இ‌‌ன்று நடைபெ‌ற்ற 10 ‌மீ‌ட்ட‌ர் து‌ப்பா‌க்‌கி‌ச் சுடு‌ம் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் அ‌‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா த‌ங்க‌ம் வ‌ெ‌ன்றா‌ர்.

ஆ‌ண்களு‌க்கான 10 ‌மீ‌ட்ட‌ர் ‌'ஏ‌ர்ரை‌பி‌ள்' இறு‌‌தி‌ச் சு‌ற்‌றி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் அ‌பின‌‌‌‌‌வ் ‌பி‌ந்‌த்ரா மொ‌த்த‌ம் 700.5 பு‌ள்‌ளி‌க‌ள் பெ‌ற்று த‌ங்க‌ம் வெ‌ன்று இ‌ந்‌தியா‌வி‌ன் பத‌க்க ப‌ட்டியலை‌த் தொட‌ங்‌கிவ‌ை‌த்தா‌ர். இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் அவ‌ர் இ‌ந்‌தியா‌வு‌க்கு பெரு‌மை சே‌ர்‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பு‌திய வரலாறு படை‌த்து‌ள்ளா‌ர். ‌பீ‌ஜி‌ங் ‌ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற இ‌ந்‌திய‌ர் எ‌ன்ற பெருமையை பெ‌ற்றா‌ர். ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌னிநப‌ர் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா த‌ங்க‌ம் வெ‌ல்வது இதுவே முத‌ல் முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ப்போ‌ட்டி‌யி‌ல் கட‌ந்த 2004 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற ‌சீனா‌வி‌ன் சூ ‌கு‌யின‌‌ன் மொ‌த்த‌ம் 699.7 பு‌ள்‌ளிக‌ள் பெ‌ற்று வெ‌ள்‌ளி‌ப்பத‌க்க‌ம் வெ‌ன்றா‌ர்.

‌தகு‌தி‌ச் சு‌ற்‌றி‌ல் ‌சிற‌ப்பாக ‌விளையாடிய பி‌ன்ல‌ா‌ந்‌தி‌ன் ஹெ‌ன்‌றி ஹ‌க்‌கினெ‌ன் வெ‌ண்க‌ல‌ப் பத‌க்க‌ம் வெ‌ன்றா‌ர்.

ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற ‌பி‌ந்‌த்ரா‌வு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் பாரா‌ட்டு!

ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல், து‌ப்பா‌க்‌‌‌கி‌ச் சுடுத‌ல் ‌பி‌ரி‌வி‌ல் த‌ங்க‌ப்பத‌க்க‌ம் வெ‌ன்று வரலாறு ப‌டை‌த்த இ‌ந்‌திய ‌வீர‌ர் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ராவு‌க்கு குடியர‌சு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் தனது பாரா‌ட்டு‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ செ‌ய்‌தி‌யி‌ல், "அ‌பின‌வ் ‌பி‌ந்‌த்ரா இ‌ந்‌‌தியாவை பெருமையடைய‌ச் செ‌ய்து‌ள்ளா‌ர்" எ‌ன்று கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.‌

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி‌த் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி, ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி‌ ஆ‌கியோரு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா‌வு‌க்கு த‌ங்களது பாரா‌ட்டு‌க்க‌ளை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். நாடு முழுவது‌ம் இரு‌ந்து ஒ‌லி‌ம்‌பி‌க்‌‌கி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற 'த‌ங்க மக‌ன்' அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ராவு‌க்கு பாரா‌ட்டு‌க்க‌ள் கு‌வி‌‌ந்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது.

இ‌ன்று நட‌ந்த ஆ‌ண்களு‌க்கான 10 ‌மீ‌ட்ட‌ர் ‌'ஏ‌ர்ரை‌பி‌ள்' இறு‌‌தி‌ச் சு‌ற்‌றி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் அ‌பின‌‌‌‌‌வ் ‌பி‌ந்‌த்ரா மொ‌த்த‌ம் 700.5 பு‌ள்‌ளி‌க‌ள் பெ‌ற்று த‌ங்க‌ம் வெ‌ன்று வரலா‌று படை‌த்தா‌‌ர். இத‌ன் மூல‌ம் அவ‌ர் ஒ‌லி‌ம்‌பி‌க் த‌னிநப‌ர் ‌பி‌ரி‌வி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற முத‌ல் இ‌ந்‌திய ‌வீ‌ர‌ர் எ‌ன்ற பெருமையையு‌‌ம் பெ‌ற்றா‌ர்.

இ‌ந்‌தியா இத‌ற்கு மு‌ன்ன‌ர் கட‌ந்த 1980ஆ‌ம் ஆ‌ண்டு நட‌‌ந்த ஒ‌லி‌‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌‌ன் போது ஹா‌க்‌கியி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்றது. 28 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு இ‌ப்போது இ‌ந்‌தியாவு‌க்கு ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் த‌ங்க‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

விவசா‌யிகளு‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கடித‌ம்!

விவசாய‌க் கட‌ன்களை‌த் த‌ள்ளுபடி செ‌ய்ததை‌ச் சு‌ட்டி‌க்கா‌ட்டி, வரு‌கிற ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிரசு‌க்கு வா‌க்க‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி ஒ‌வ்வொரு ‌விவசா‌யி‌க்கு‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கடித‌ம் எழு‌‌தியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌க் கடித‌ம் ‌விரை‌வி‌ல் ‌விவசா‌யிகளை‌ச் செ‌ன்றடையு‌ம் எ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌தி‌க் ‌விஜ‌ய்‌சி‌ங் கூ‌றினா‌ர்.

நாடு முழுவதும் விவசாயிகளின் கடன் தொகை ரூ. 70 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இ‌ந்த விவசாயிகளின் பட்டியல் சில நாள்களில் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றார் திக் விஜய்சிங்.

கட‌ன் த‌ள்ளுபடி சலுகையை தேர்தல் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. கடன் தள்ளுபடி செய்த காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு மன்மோகன் எழுதியு‌ள்ள கடிதத்துடன் ஒவ்வொரு விவசாயியையும் நே‌‌ரி‌ல் சந்திக்க அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்ட பிரசாரம் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்குகிறது. கிராமப் புறங்களில் ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேரை காங்கிரஸ் உறுப்பினர்களாக்கவோ அல்லது காங்கிரஸ் ஆதரவாளர்களாக்கவோ திட்டமிட‌ப்ப‌ட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து அளவில் இய‌ங்கு‌ம் கட்சிக் குழுக்களை, பிற்படுத்தப்பட்ட, தலித் பிரதிநிதிகள் அ‌திக‌ம் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்கவு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

இதுதவிர கிராமப்புற வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் சட்டம், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

Saturday, August 9, 2008

சேது சமுத்திரம்: வழக்கறிஞர் வாதமும் அரசியல் திசைதிருப்பலும்!

சேதசமுத்திரககால்வாயதிட்டத்தமுடக்கவேண்டுமஎன்‘உன்னத’ நோக்கோடஉச்நீதிமன்றத்திலதொடரப்பட்வழக்கவிசாரணையிலவழக்கறிஞர்களஎடுத்வைத்வாதத்ததங்களினத-அரசியலிற்காகவும், தேர்தலவசதிக்காகவுமசிஅரசியலதலைவர்களமிலாவகமாமுறுக்கி, திருத்தி அறிக்கவெளியிட்டமக்களதிசதிருப்முயன்றுள்ளனர்.

உச்நீதிமன்றத்திலகடந்செவ்வாய், புதனகிழமைகளிலநடந்விசாரணையின்போது, சேதசமுத்திரககால்வாயதிட்டத்தநிறைவேற்றுமகடற்பகுதியிலஉள்

FILE
மணலதிட்டுக்களஇராமரகட்டிபாலமஎன்றஅத்திட்டத்தஎதிர்த்தவழக்குததொடர்ந்தவர்களினசார்பாஆஜராகி வாதிட்மூத்வழக்கறிஞரபராசரண், புராணங்களசிலவற்றிலிருந்தமேற்கோள்களைககாட்டி வாதிட்டார்.

அவருடைவாதங்களுக்கபதிலளித்தமத்திஅரசினசார்பாஆஜராகி வாதிட்மூத்வழக்கறிஞரபாலி எஸ். நாரிமேன், வழக்கறிஞரபராசரணகுறிப்பிட்டுககாட்டிபுராஆதாரங்களிலஇருந்தும், கம்இராமயணமஉள்ளிட்புராணத்தஅடிப்படையாக்ககொண்காவியங்களிலஇருந்துமஆதாரங்களஎடுத்துரைத்தஎதிர்வாதமிட்டார்.

இராமரவாழ்ந்தஉண்மையஎன்றும், அவரகடலைககடந்தஇலங்கசென்றதனதமனைவியமீட்அமைத்பாலமஇராமரசேதஎன்றுமவழக்கறிஞரபராசரணவாதிட்டத்தமறுத்தவாதிட்வழக்கறிஞரநாரிமேன், புராணங்களின்படியஎடுத்துக்கொண்டாலுமதானகட்டிபாலத்ததனதமனைவி சீதையமீட்டுககொண்டுவந்தபபிறகஇராமரஒரவில்லைசசெலுத்தி அதனைததகர்த்துவிட்டாரஎன்றுள்ளதையுமசுட்டிக்காட்டினார்.

நீதிமன்றமதெரிவித்ஆலோசனை!

இரண்டநாட்களநடந்மிமுக்கியத்துவமவாய்ந்இந்விசாரணையில்,

FILE
சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்கடலஆழப்படுத்துமபணி நடைபெறும் 6வதபாதையிலிருந்து (6th Alignment), அதற்கமாற்றாக 4வதபாதையில் (4th Alignment) நிறைவேற்றுவதகுறித்தயோசிக்குமாறமத்திஅரசிற்கஉச்நீதிமன்அமர்வஆலோசனவழங்கியது. நம்பிக்கைகளுக்குமமதிப்பளித்து, அதநேரத்திலதிட்டத்தையுமநிறைவேற்றிஇந்ஆலோசனையவழங்குவதாநீதிபதிகளதெரிவித்தனர்.
நீதிமன்றத்தினஆலோசனையபரிசீலித்தவரும் 29ஆமதேதி அரசினமுடிவஅறிவிப்பதாவழக்கறிஞரநாரிமேன

FILE
நீதிபதிகளுக்குததெரிவித்தார்.

இதுவஇவ்வழக்கைபபொறுத்தவரஇன்றுள்நிலை.

இராமரமீதஅக்கறகொண்டவர்களாகககாட்டிக்கொள்ளுமஇந்மதவாதிகளும், அதகொள்கையகடைபிடித்தஆட்சியைபபிடிக்முடியுமஎன்றசிந்திக்குமஅரசியலதலைவர்களுமநீதிமன்றத்தினஇந்ஆலோசனகுறித்தகருத்ததெரிவித்தஅறிக்கஅளித்திருந்தாலஅதிலதவறேதுமகாணுவதற்கில்லை. ஏனென்றாலசேதசமுத்திரததிட்டமஎந்வகையிலுமநிறைவேற்றப்படக்கூடாதஎன்பதுதானஇவர்களதகொள்கஎன்பதஇப்பிரச்சனஎழுப்பப்பட்நாளமுதலதெரிந்நிலைப்பாடுதான்.

ஆனாலஇவர்களஎழுப்பியுள்பிரச்சனஎன்னவென்றால், “வழக்கறிஞரநாரிமேனினவாதத்தினமூலமஇராமரஇருந்ததமத்திஅரசஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதனஇராமரபிறகஇடித்தாரஎன்றகூறியிருப்பதனமூலமஇதுவரஅதஇயற்கையாஅமைந்மணலதிட்டுதானஎன்றகூறிவந்அரசு, அந்நிலத்திட்டுக்களஇராமரபாலமஎன்றஏற்றுக்கொண்டுவிட்டது” என்றகூறி அறிக்கவெளியிடுகிறார்கள்.

உண்மையமுழுமையாமறைத்தமுன்வைக்கப்பட்டுள்இந்வாதமஎவ்வளவஅயோக்கியத்தனமானதஎன்பதவழக்கறிஞர்களுக்கஇடையநடந்வாதத்தினை (முழவிவரத்தையுமவெளியிட்நாளிதழ்களிலிருந்து) படித்தவர்களுக்குததெரியும்.


FILE
அதஇராமரபாலம்தானா? என்கேள்விக்கவிடகூமுற்பட்வழக்கறிஞர், தனதவாத்ததிற்கஆதாரமாசிவிவரங்களஎடுத்தவைக்கிறார். அதனமறுத்தவாதிட்அரசதரப்பவழக்கறிஞரஅதஆதாரத்திலிருந்தும், மற்சிஆதாரங்களிலஇருந்துமசிவிவரங்களஎடுத்துககூறி எதிர்வாதமசெய்கிறார். இந்வாதத்தினநோக்கமென்ன? நீங்களஆதாரமாகககூறுமபுராணங்களிலஇருந்தஉங்களகூற்றிற்கஎதிராவிவரங்கள் (அதாவதஇராமரபாலமஇராமராலேயதகர்க்கப்பட்டதஎன்பது) உள்ளதஎன்றசுட்டிக்காட்டுவதற்குத்தானதவிர, அதற்காஅந்ஆதாரங்களினதகவல்களஏற்றுக்கொண்டதாஎந்தவிதத்திலுமஅர்த்தமகொள்முடியாது. நீதிமன்றத்திலவழக்கறிஞர்களமுன்வைக்குமவாதங்களைப்பற்றி அறிந்எவருக்குமஇததெரியும், புரியும்.

ஆனாலஇப்பிரச்சனையிலத-அரசியலகுளிர்காய்பவர்கள், இராமரஎன்றொருவரவாழ்ந்ததற்காஆதாரமஇல்லஎன்றமுதலிலகூறிஅரசு, வழக்கறிஞரினவாத்தத்தின்மூலமஅவரவாழ்ந்தாரஎன்பதஒப்புக்கொண்டுள்ளதஎன்றஅறிக்கவிடுகின்றனர். மக்களினசிந்தனைததிறனஇந்தததலைவர்களஅந்அளவிற்க‘எடபோட்டு’ வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, அதஇயற்கையாஅமைந்மணலதிட்டுதான், மனிதராலகட்டப்பட்ஓன்றஅல்என்றவாக்குமூலமதாக்கலசெய்தபின்னரதிரும்பப்பெற்மத்திஅரசு, இப்பொழுதஅதஇராமரகட்டியதஎன்றஒப்புக்கொண்டுவிட்டு, அவரஇடித்துவிட்டாரஎன்றபொய்யுரைக்கிறதஎன்றுமகூறியுள்ளார்கள்.

அரசவழக்கிறிஞரினவாதத்திலஇப்படிப்பட்உண்மவெளியாகியிருப்பதஉச்நீதிமன்நீதிபதிகளஉணரவில்லையா? நாரிமேனினவாதமஇவர்களகூறுவதுபோஅந்உண்மையதொடுகிறதஎன்றதெரிந்திருந்தால், “அப்படியானாலநீங்கள் (அரசு) இராமரஇருந்ததஒப்புக்கொண்டுவிட்டீர்கள். அதஇராமரகட்டியதஎன்பதையுமசொல்லி விட்டீர்கள். இனி இந்வழக்கிலவாதிப்பதற்கஒன்றுமில்லை” என்றகூறியிருப்பார்களே?

உச்நீதிமன்றத்தினநீதிபதிகளுக்கதெரியாஉண்மைகளஎல்லாமதமிழ்நாட்டினஎதிர்க்கட்சிததலைவராஜெயலலிதாவிற்குததெரிகிறது. என்னஞாதிருஷ்டி!

இரண்டநாளவிசாரணையில், வழக்கறிஞர்களஇருவருமசெய்வாதங்களுக்கஇடையகுறுக்கிட்உச்நீதிமன்றததலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. இரவீந்திரன், ே.எம். பஞ்சாலஆகியோரகொண்நீதிமன்அமர்வகேள்விகளைககேட்டது.

இதஒரவழிப்பாட்டுததலமஎன்கிறாரவழக்கறிஞரபராசரண், அதற்கநீதிபதி இரவீந்திரனகுறுக்கிட்டு 25 ி.ீ. நீளமுள்வழிபாட்டுத்தலமவேறஎங்காவதஉள்ளதா? என்றகேள்வி எழுப்‌பியுள்ளார்.

அதுமட்டுமா? நாமபூமியவணங்குகிறோம்,

FILE
அதற்காநிலத்தைததோண்டி எதையுமசெய்யக்கூடாதஎன்றஅர்த்தமா? இமயமலையவணங்குகிறோம், எனவஅதனைததொடக்கூடாதா? கோவர்த்தமலையவணங்குகிறாமஎன்பதற்காஅதனமீதஎந்தததிட்டத்தையு‌‌நிறைவேற்றக்கூடாதா? இராமரபாலமஎன்றநீங்களகுறிப்பிடுமஅந்நிலத்திட்டிலிருந்தசிபிடி மண்ணஎடுத்தவேறொரஇடத்திலபோட்டாலஅதனாலஅதனபுனிதமபோய்விடுமா? என்றெல்லாமகேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கமுன்னரஇவ்வழக்கதொடர்ந்சுப்ரமணிசுவாமி வாதிட்டபோதகுறிக்கிட்தலைமநீதிபதி, இராமரபாலமஎன்பதவழபாட்டிற்குரியதஎன்கீறீர்களா, கடலிலமுழ்கியுள்அதனநடுக்கடலிற்கசென்றயாரவணங்கியுள்ளார்கள்? என்றகேள்வி எழுப்பினார். பதிலசொல்முடியாசுவாமி, தானஒவ்வொரஆண்டுமபடகிலசென்றவழிபட்டவந்ததாகககூறி மழுப்பினார்.

இப்படி ஏராளமாகேள்விகளநீதிபதிகளஎழுப்பியுள்ளனர்.

FILE
அவைகளுக்கபதில்கள்தானஇல்லை. நடந்ததும், உண்மையுமஇவ்வாறிருக்க, “தனதவாதத்திற்கவலசேர்க்இராமரஅழைக்கிறதஅரசு” என்றகூறுகிறாரஜெயலலிதா.

சேதுககால்வாயதிட்டத்தஅடியோடபுதைக்வேண்டுமஎன்றகூறிவருமஇந்தததலைவர், அத்திட்டத்தஅனுமதித்தநாட்டிலமதககலவரமஏற்பதானஅனுமதிக்கப்போவதில்லஎன்றகூறியுள்ளார். எவ்வளவபெரிமிரட்டல். சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்றினாலமதககலவரமவெடிக்குமஎன்கிறாரதமிழ்நாட்டினமுன்னாளமுதலமைச்சர்!

“கோடானகோடி மக்களினவணக்கத்திற்கும், வழிபாட்டிற்குமஉரிபுராதனசசின்னமாஇராமரபாலத்தஉடைப்பதென்பது, கோடானகோடி இந்தமக்களினஇதயத்தைததகர்ப்பதற்கஒப்பாசெயலாகிவிடும்” என்றஜெயலலிதகூறுகிறார்!

வணக்கத்திற்கும், வழிபாட்டிற்குமஉரிஅந்தபபுராதனசசின்னத்தைபபற்றி சேதசமுத்திரககால்வாயதிட்டத்ததுவக்கும்வரஜெயலலிதஅறியாமலஇருந்ததஎப்படி? அத்திட்டத்தை 2004ஆமஆண்டுவரஆதரித்ததமட்டுமின்றி தனதகட்சியினதேர்தலஅறிக்கையிலுமதெரிவித்ததஎதற்காக? கடந்ஆண்டுவரஇத்திட்டத்தாலமீனவர்களினவாழ்வாதாரமபாதிக்கப்படும், சுற்றுசசூழலபாதிக்கப்படுமஎன்பதற்காதானஎதிர்க்கததுவங்கியதாகககூறிவந்ஜெயலலிதா, இன்றைக்கா.ஜ.க.விஅதிகமாஉரத்குரலிலஎதிர்பாட்டுப் பாடுவதஏன்?

காரணமஅரசியல். இததமிழமக்களுக்கமட்டுமல்ல, இந்தியாவினகோடானகோடி மக்களுக்குமபுரிந்துதானஉள்ளது.

இந்உண்மையஅறியாமலஅறிக்கவிடுவதுதானஅறியாமை. தலைவர்களகூறுவதெல்லாமவேவாக்கஎன்றநினைத்தநமதநாட்டமக்களஏமாந்காலமெல்லாமகடந்துபோயஆண்டுகளபலவாகிவிட்டன. அரசியலதலைவர்களஅதனைபபுரிந்துகொண்டால், அவர்களினஅரசியலிற்கஎதிர்காலமஇருக்கும்.