Search

Custom Search

Tuesday, September 30, 2008

புகை‌‌ப் ‌பிடி‌ப்பதை‌ தடை செ‌ய்யு‌ம் உ‌த்தர‌வி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!

மகா‌த்மா கா‌ந்‌தி ‌பிற‌ந்த நாளான அ‌க்டோப‌ர் 2 முத‌ல் பொது இட‌ங்க‌ளி‌ல் புகை‌ப் ‌பிடி‌‌க்க‌த் தடை ‌வி‌தி‌க்கு‌‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தர‌வி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

பொது இட‌ங்க‌ளி‌ல் புகை‌ப் ‌பிடி‌ப்பத‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்கு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தர‌வி‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி ஐ.டி.‌சி, இ‌ந்‌திய ஹோ‌ட்ட‌ல்க‌ள் கூ‌ட்டமை‌ப்பு ஆ‌கியவை உ‌ட்ப‌ட 4 பே‌ர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்த மனு‌க்களை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ‌பி.எ‌ன்.அக‌ர்வா‌ல், ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தர‌வி‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்க முடியாது எ‌ன்றா‌ர்.

"இது ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌த்த‌க்க கோ‌ரி‌க்கை அ‌ல்ல. பொது இட‌ங்க‌ளி‌ல் புகை‌ப் ‌பிடி‌ப்பதை‌ தடை செ‌ய்யு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தர‌வி‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌க்‌கிறே‌ன்." எ‌ன்றா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல், புகை‌ப் ‌பிடி‌க்க‌த் தடை ‌வி‌தி‌க்கு‌ம் உ‌த்தரவை‌‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி அ‌க்டோப‌ர் 2 முத‌ல் நடைமுறை‌ப்படு‌த்த அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று ம‌த்‌திய அரசு ‌விடு‌த்‌திரு‌ந்த கோ‌ரி‌க்கையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ண்டது.

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.500 அபராதம்: காவ‌ல்துறை ஆணைய‌ர் எச்சரிக்கை!

மகா‌த்மா கா‌ந்‌தி‌ ‌பிற‌ந்தநாளையொ‌ட்டி அ‌க்டோப‌ர் 2ஆ‌ம் முத‌ல் பொது இட‌ங்க‌ளி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தா‌ல் ரூ.100 முத‌ல் ரூ.500 வரை உடனடி அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் என‌்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.


       செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌‌யி‌ல், கா‌ந்‌தி ஜெய‌ந்‌தியான அக்டோபர் 2ஆ‌ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது மத்திய, மாநில சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதார மையங்கள், கலையரங்குகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கருத்தரங்கு மற்றும் கலந்தாய்வு கூடங்கள், மரு‌த்துவமனை வளாகம், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பொது அலுவலகங்கள், உணவு விடுதிகள், பள்ளி- கல்லூரி வளாகங்கள், நீதிமன்ற வளாகங்கள், பூங்காக்கள்.

பேரு‌ந்து நிலையங்கள், பேரு‌ந்து நிறுத்தங்கள், கடை வீதிகள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள், கூட்டுறவு மையங்கள், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து மதக் கோவில்கள், பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களாகும். மேற்கண்ட இடங்களில் யாராவது புகை பிடித்தால் உடனடியாக அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடு‌த்து ரூ.100 முத‌ல் ரூ.500 வரை அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர் காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர்.

நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை நேர்மையாக நட‌ந்து வரு‌கிறது எ‌ன்று‌ம் விசாரணை தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எ‌ன்று‌ம் காவ‌ல்துறை ஆணைய‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமை‌ச்சக‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்ப‌ட்டதை தொட‌‌ர்‌ந்து சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர், பொது மக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக 'மக்கள் சேவையில் சென்னை காவல்' என்ற விழிப்புணர்வு வாசக‌‌ங்‌க‌ள் அச்சிடப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

மி‌ன் த‌ட்டு‌ப்பாடு : வெ‌ள்ளை அ‌றி‌க்கை - ‌விஜயகா‌ந்‌த் கோ‌ரி‌க்கை!

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌நிலவு‌ம் ‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு அரசு இதுவரை எ‌ன்ன நடவடி‌க்கை எடு‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌த்து‌ம், ‌மி‌ன் த‌ட்டு‌ப்பாடு ‌நிலவர‌ம் கு‌றி‌த்து‌ம் த‌மிழக அரசு வெ‌ள்‌ளை அ‌றி‌க்கை வெ‌‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்!

இது கு‌றி‌த்து ‌விஜயகா‌ந்‌த் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

ஜெயலலிதா‌ ஆ‌ட்‌சி‌‌க் கால‌த்‌தி‌ல் 83 மெகாவாட் மின் உற்பத்திக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 560 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங் களுக்கே கருணாநிதி அனுமதி அளித்துள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மின் உற்பத்தித் திட்டங்கள் இருந்தால்தான் மின் தட்டுப்பாடு வராது. மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் முதல்வர் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தான்.

1991 முதல் இன்று வரை இருவரும் 643 மெகாவாட் மின்சார உற்பத்தி அளவுக்கே அனுமதி அளித்துள்ளனர். இந்த 17 ஆண்டுகளில் மின் தேவை 4,875 மெகாவாட்டிலிருந்து 9,567 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

‌மி‌ன் பற்றாக்குறை எவ்வளவு எ‌ன்பது கு‌றி‌த்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 1000 மெகா வாட்டிலிருந்து 3,500 மெகாவாட் வரை பற்றாக்குறை என்று பத்திரிகையில் செய்திகள் வருகின்றன. ஒரு நாணயமான அரசு எவ்வளவு பற்றாக்குறை என்பதையாவது மக்களுக்கு அறிவிக்க வேண்டாமா?

மின்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்றதன் பலன் என்ன? இதர மாநிலங் களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறதா? மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

இன்றியமையாத தேவையான மின்சாரத்தில் எவ்வளவு பற்றாக்குறை என்பதையும், அவற்றை நிவர்த்தி செய்ய எத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்பதையும், எவ்வளவு காலத்தில் மின்சார நெருக்கடி தீரும் என்பதையும் அரசு வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Friday, September 26, 2008

ந‌வீன இ‌ந்‌தியாவ‌ி‌ன் ‌சி‌ற்‌‌‌பி: ம‌ன்மோகனு‌க்கு ஜ‌ர்தா‌ரி புகழார‌ம்!

பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் உடனான தனது முத‌ல் ‌ச‌‌ந்‌தி‌ப்பை மே‌ற்கொ‌‌ண்ட பா‌கி‌ஸ்தா‌ன் பு‌திய அ‌திப‌ர் ஆ‌சி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரி, 'ந‌வீன இ‌ந்‌தியா‌வி‌ன் ‌சி‌ற்‌‌பி' எ‌ன்று ‌‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்கு‌‌க்கு புகழார‌ம் சூ‌ட்டியு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா, ‌‌பிரா‌ன்‌ஸ் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ‌இ‌ந்‌திய ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌நியூயா‌ர்‌க்‌கி‌‌ல் தா‌ன் த‌ங்‌கியு‌ள்ள ‌மி‌ல்லே‌னிய‌ம் ஓ‌ட்ட‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ஆ‌சி‌ப் அ‌லி ஜ‌‌ர்தா‌ரியை‌ச் ச‌ந்‌தி‌த்து பே‌‌சினா‌ர்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது இரு நா‌ட்டு தலைவ‌ர்களு‌ம் எ‌ல்லை தா‌ண்டிய பய‌ங்கரவாத‌ம் ம‌ற்று‌ம் இரு நாடுகளு‌க்‌கிடையேயான உற‌வுக‌ள் கு‌றி‌த்து பே‌சியதாக தெ‌ரி‌‌கிறது. அ‌ப்போது பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ஜ‌ர்தா‌‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்கை 'ந‌வீன ‌இ‌ந்‌தியா‌வி‌ன் ‌சி‌ற்‌பி' எ‌ன்று அழை‌த்தா‌ர்.

மேலு‌ம், தா‌ங்க‌ள் அனைவரு‌ம் ‌விரு‌ம்பு‌ம் ‌பிரத‌மராக உ‌ள்‌ளீ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் இ‌ந்‌தியா‌வி‌ன் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ல் உ‌ங்க‌ளு‌க்கு பெரு‌ம் ப‌ங்கு இரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் ஜ‌ர்தா‌ரி கு‌றி‌ப்‌பி‌‌ட்டா‌ர்.

சுமா‌ர் ஒரு ம‌ணி நேர‌த்து‌க்கு‌ம் மேலாக ந‌ீடி‌த்த இரு தலைவ‌ர்க‌ளி‌ன் ச‌ந்‌தி‌ப்பு ப‌ற்‌றி ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய இ‌ந்‌திய அயலுறவு செயல‌ர் ‌சிவச‌ங்க‌ர் மேன‌‌ன், இரு நா‌ட்டு தலைவ‌ர்க‌ளி‌ன் ச‌ந்‌தி‌ப்பு‌ம் சுமூகமாகவு‌ம், பயனு‌ள்ளதாகவு‌ம், ந‌ட்பு ‌‌ரீ‌தியாகவு‌ம் இரு‌ந்ததாகவு‌ம் ‌இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு பிரத‌ம‌‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்கு‌க்கு மன ‌நிறைவை அ‌ளி‌த்ததாகவு‌ம் கூ‌றினா‌ர்.

ஜி-8 அமைப்பில் இந்தியாவை இணைக்க பிரான்ஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பையும், ஜி-8 நாடுகள் அமைப்பையும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரான்ஸ், ஜி-8 நாடுகள் அமைப்பில் இந்தியா, சீனாவையும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

‌நியூயா‌ர்‌க்‌கி‌ல் நட‌ந்து வரும் 63வது ஐ.நா பொது அவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் உரையா‌ற்றிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தற்போதைய வல்லரசுகளுடன் எதிர்கால வல்லரசுகளும் ஒருங்கிணைந்து தோளோடு தோள் சேர்த்து செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதுடன், ஜி-8 அமைப்பில் இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளை இணைத்து அதனை ஜி-13 அல்லது ஜி-14 என்ற அமைப்பாக மாற்ற வேண்டும் என்றார்.

ஜி-8 அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை எ‌‌ந்த நா‌ட்டி‌ன் ச‌ட்டமு‌ம் க‌ட்டு‌ப்படு‌த்தாது: ‌பிரணா‌ப்!

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌ட்டை 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் ம‌ட்டுமே க‌ட்டு‌ப்படு‌த்து‌ம். ச‌ர்வதேச‌க் கொ‌ள்கைக‌ள் த‌விர எ‌ந்தவொரு நா‌ட்டினுடைய த‌னி‌ப்ப‌ட்ட உ‌ள்நா‌ட்டு‌ச் ச‌ட்ட‌ங்களு‌ம் இ‌ந்த உட‌ன்பா‌ட்டை‌க் க‌ட்டு‌ப்படு‌த்தாது எ‌ன்று அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

வாரணா‌சி‌யி‌ல் அயலுறவு அமை‌ச்சக‌‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்‌திரு‌ந்த கரு‌த்தர‌ங்க‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி‌யிட‌ம் இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு ப‌ற்‌றி‌க் கே‌ட்டத‌ற்கு அவ‌ர் கூ‌றியதாவது:

நா‌ம் ஒரு இறையா‌ண்மை உடைய நாடு எ‌ன்ற முறை‌யி‌ல் ம‌ற்றொரு இறையா‌ண்மை உடைய நாடான அமெ‌ரி‌க்காவுட‌ன் அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌ட்டை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளோ‌ம்.

இ‌ந்த உட‌ன்பாடு 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வி‌திக‌ள், நா‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ள ச‌ர்வதேச அள‌விலான அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை தொட‌ர்பான உட‌ன்படி‌க்கைக‌ள் ஆ‌கியவ‌ற்றா‌ல் ம‌ட்டுமே க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்படு‌ம். ச‌ர்வதேச அள‌விலான அணு அயுத‌ப் பரவ‌ல் தடை தொட‌ர்பான உட‌ன்படி‌க்கைகளை ‌நி‌ர்வ‌கி‌க்கு‌ம் ‌விய‌ன்னா‌வி‌ல் உ‌ள்ள ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை‌யி‌ன் க‌ண்கா‌ணி‌ப்பு ‌வி‌திமுறைகளு‌க்கு‌ம் இ‌‌ந்த உட‌ன்பாடு க‌ட்டு‌ப்படு‌ம்.

இவை த‌விர எ‌ந்த நா‌ட்டி‌ன் த‌னி‌ப்ப‌ட்ட உ‌ள்நா‌ட்டு‌ச் ச‌ட்ட‌ங்களு‌ம் இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌ட்டை‌க் க‌ட்டு‌ப்படு‌த்தாது.

இ‌வ்வாறு அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ள்நா‌ட்டு‌ச் ச‌ட்ட‌ங்களை (ஹை‌ட் ச‌ட்ட‌ம்) இ‌ந்‌தியா ‌மீ‌றினா‌ல் அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பாடு மு‌றி‌ந்து‌விடு‌ம் எ‌ன்று செ‌ய்‌திக‌ள் வெ‌ளியானது ப‌ற்‌றி‌க் கே‌ட்டத‌ற்கு, "அமெ‌ரி‌க்காவோ அ‌ல்லது வெறு எ‌ந்த நாடாக இரு‌ந்தாலு‌ம் அத‌ன் த‌னி‌ப்ப‌ட்ட முடிவெடு‌க்கு‌ம் ‌விவகார‌த்‌திலு‌ம் நா‌ம் தலை‌யிடுவதையு‌ம், நமது த‌னி‌ப்ப‌ட்ட முடிவெடு‌க்கு‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் ‌பிற நாடு தலை‌யிடுவதையு‌‌ம் நா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை" எ‌ன்றா‌‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி.

Wednesday, September 17, 2008

காற்றழுத்த தாழ்வு நிலை ‌தீ‌விர‌‌ம்!

வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒரிசா மாநிலம் கட்டாக் அருகே மையம் கொண்டுள்ளது!

இது மேலும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு ஒரிசா, மேற்கு வங்கத்தின் கரையோரப் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலிற்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவின் வடக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

அஜித்-விஜய் 50-50

அஜித்தும்-விஜயும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்கள் ஐம்பதாவது படங்கள் என்பதால் அவரவரின் ரசிகர் மன்றத்தினர் பரபரப்பாகிவிட்டார்கள்.

பிரபுதேவா இயக்கிக் கொண்டிருக்கும் படமான 'வில்லு' விஜயின் 49வது படம். ஐம்பதாவது படத்தை யார் இயக்கப் போவது என்ற போட்டியில் ஜெயித்திருப்பது எஸ்.ஏ. சந்திரசேகரன்.

விஜயின் ஐம்பதாவது படத்துக்கான அதிரடியான கமர்ஷியல் கதையை எப்போதே ரெடி செய்து வைத்துவிட்டேன். தலைப்பு 'வேட்டைக்காரன்'. இது ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தலைப்பு. விஜய்காக தேர்வு செய்தேன் என்கிறார்.

அதேபோல், தற்போது அஜித் நடிக்கும் ஏகன் படம் 48வது படம். இதையடுத்து சிவாஜி புரொடக்சன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்ததாக 50வது படத்தை இயக்கப் போவது யார் என்றும், தயாரிக்கும் பேனர் பற்றியும் விரைவில் வெளிவர வருகிறது.

இதற்கிடையில் ஐம்பதாவது படமாக இந்தியில் சயீஃப் அலிகான் நடித்து வெற்றி பெற்ற 'ரேஸ்' படத்தை தமிழில் எடுக்கவும், அஜித் நடிக்கவும் விஜய் அமிர்தராஜ் கேட்க, ஐம்பதாவது படம் ரீ-மேக் இல்லாத படத்தில்தான் நடிக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தை 'தல' சொல்ல, 51வது படமாக ரேஸ் தயாராக உள்ளது.


இந்தியாவில் புகை‌ப் ‌பிடி‌ப்பதா‌ல் இற‌ப்போ‌ர் எண்ணிக்கை அதிகரி‌க்கு‌ம்!

இ‌ந்‌தியா‌வி‌ல் 2010 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல், புகைப் ‌பிடி‌ப்பதா‌ல் ஆ‌‌ண்டுதோறு‌ம் 10 ல‌ட்ச‌‌ம் பே‌ர் ப‌லியாக‌க்கூடு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கிறது!

2006-07இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 57 ‌விழு‌க்காடு ஆண்களும், 10.9 ‌விழு‌க்காடு பெண்களும் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர்.

உலக இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2006-இன் படி,

13-15 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 14 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

15 ‌‌‌விழு‌க்கா‌டு புகை பிடிக்காதவர்கள் அடுத்த ஆண்டிலேயே புகை பிடிக்க துவங்கிவிடுகின்றனர்.

40 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர்.

70 ‌விழு‌க்காடு மாணவர்கள் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர்.

இங்கிலாந்து நாட்டு மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 2010-களில், ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதால் இறந்து விடுவார்கள்.

உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் 2030ஆம் ஆண்டில் புகையிலையினால் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் அதிகமாகப் பெருகிவிடும்.

இ‌‌ந்‌தியா- வ‌ங்கதேச‌ம் கட‌ல் எ‌ல்லை‌ப் பே‌ச்சு உட‌ன்பாடு இ‌ன்‌றி முடி‌ந்தது!

வ‌ங்க‌க் கட‌லி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌‌த்து‌க்கொ‌ள்வது தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக நட‌ந்த தொ‌ழி‌ல்நு‌ட்ப அள‌விலான பே‌ச்சு உட‌ன்பாடு ஏது‌மி‌ன்‌றி முடி‌ந்தது.

இர‌ண்டு நாடுகளு‌க்கு‌ம் பொதுவான ஹ‌ரியப‌ங்கா ஆ‌‌ற்று முக‌த்துவார‌த்‌தி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌ப்ப‌தி‌ல் கரு‌த்துவேறுபாடு ஏ‌ற்ப‌ட்டதே பே‌ச்‌சி‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்படாதத‌‌ற்கு காரண‌ம் எ‌ன்று செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வ‌ங்க‌க் கட‌லி‌ல் எ‌ல்லை ‌பி‌ரி‌த்து‌க்கொ‌ள்வது தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌‌ல் தொ‌ழில‌்நு‌ட்ப அள‌விலான பே‌ச்சு வ‌ங்கதேச‌த் தலைநக‌ர் டா‌க்கா‌வி‌ல் கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக நட‌ந்து வ‌ந்தது. காரசாரமான ‌விவாத‌ங்க‌ள் ‌நிறை‌ந்த இ‌ந்த‌ப் பே‌ச்சு இ‌ன்று உட‌ன்பாடு ஏது‌மி‌ன்‌றி முடி‌ந்தது.

இத‌ன்‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த வ‌ங்கதேச கூடுத‌ல் அயலுறவு‌ச் செயல‌ர் எ‌ம்.ஏ.கே.முகமது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், "இர‌ண்டு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் பொது‌வாக உ‌ள்ள ஹ‌ரியப‌ங்கா ஆ‌ற்‌றி‌ன் ‌நீரோ‌ட்ட‌ம் தொட‌ர்பாக எ‌ங்களு‌க்கு‌ள் கரு‌த்து வேறுபாடு உ‌ள்ளது." எ‌ன்றா‌ர்.

பே‌ச்சை முடி‌‌த்து‌க்கொ‌ண்டு வேகமாக வெ‌ளியே‌றிய இ‌ந்‌திய‌க் குழு‌வி‌ன் தலைவ‌ர் ‌பி.ஆ‌ர்.ரா‌‌‌வ், "நா‌ங்க‌ள் ஒரு அ‌ற்புதமான ‌விவா‌த‌த்தை நட‌த்‌தியு‌ள்ளோ‌ம். ப‌ல்வேறு கரு‌த்து‌க்க‌ள், வா‌ய்‌ப்புக‌ள் கு‌றி‌த்து நா‌ங்க‌ள் ப‌ரி‌சீலனை செ‌ய்தோ‌ம்." எ‌ன்றா‌ர்.

ஹ‌ரியப‌ங்கா ஆ‌ற்‌றி‌ன் ம‌த்‌திய ‌நீரோ‌ட்ட‌ம் ‌கிழ‌க்கு‌த் ‌திசை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ள இ‌ந்‌தியா அத‌ற்கான ஆதார‌ங்களையு‌ம் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளது. ‌நீரோ‌ட்ட‌ம் வட‌க்கு த‌ல்ப‌ட்டி பகு‌தி‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய வ‌ங்கதேசமு‌ம் அத‌ற்கான ஆதார‌ங்களை‌ச் சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளது.

இ‌தி‌ல், மேலே கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ள த‌ல்ப‌ட்டி ‌தீவு கட‌ல் பகு‌தி யாரு‌க்‌கு‌ச் சொ‌ந்த‌ம் எ‌ன்ப‌தி‌ல் கட‌ந்த பல ஆ‌ண்டுகளாக இரு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் ‌பிர‌ச்சனை இரு‌ந்து வரு‌கிறது. இத‌ற்‌கிடை‌யி‌ல் ஹ‌ரியப‌ங்கா ஆறு பலமுறை தனது போ‌க்கை மா‌‌ற்‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளதா‌ல் ‌பிர‌ச்சனை இ‌ன்னு‌ம் ‌சி‌க்கலா‌கியு‌ள்ளது.

Wednesday, September 10, 2008

அக்.2-ஐ உலக மது‌ ஒ‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்: அ‌ன்பும‌ணி வே‌ண்டுகோ‌ள்!

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆ‌ம் தேதியை உலக மது‌ ஒ‌‌‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்து‌ள்ளா‌ர்.

11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இரண்டு முக்கியமான கூட்டங்கள் செ‌ப்ட‌ம்ப‌ர் 8ஆ‌ம் தே‌தி முத‌ல் 11ஆ‌ம் தேதி வரை நடைபெறு‌கிறது.

தென் கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மண்டல ஆணைய கூட்டத்தை அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதுடெ‌‌ல்‌லி‌யி‌‌ல் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்காலத்திற்கான கொள்கை நெறியையும், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் இ‌ந்த கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் அமைச்சர்கள் கலந்தாய்வு செய்யவிருக்கின்றனர். மேலும் மனிதனின் உடல் நலத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஆரம்ப சுகாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது குறித்தும் ஆராய உள்ளனர்.

இ‌ந்த கூட்டத்தில் உரையாற்றிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் அன்புமணி, இந்தியாவில் தொற்று நோய் அல்லாத பிற நோய்களை கட்டுப்படுத்துவதில் அரசின் சுமை அதிகரித்து வருவதையும், புகையிலை மற்றும் மதுவின் தீய விளைவுகளிலிருந்து ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆ‌ம் தேதியை உலக மது‌ ஒ‌ழி‌ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று‌ அவர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியும், நியாயமான விலையில் மருந்துகளும் எளிதில் கிடைக்கச் செய்வதே இந்தியாவின் முக்கிய இலக்காகும் என்று அ‌‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

தமிழகத்தில் மின் தடை ‌‌நிறு‌த்த‌ம்!

சென்னை: காற்றாலை மின் உற்பத்தி பெருக்கத்தால் தமிழகம் முழுதும் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் தடை முடிவுக்கு வருகிறது.

ஞாயிறு முதலே சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் மின் தடை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

செவ்வாய் மாலைவாக்கில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அந்த நாள் முழுதுமே காற்றாலை மின் உற்பத்தி 1,000 மெகாவாட் முதல் 1.500 மெகாவாட் வரை இருந்ததாக தமிழ் நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று காற்றாலை மின் உற்பத்தி 1,850 மெகாவாட்டாக இருந்தது என்று இந்திய காற்றாலை மின் சக்தி கூட்டமைப்பு துணைத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

செவ்வாய் நண்பகல் 12.30 மணியிலிருந்து மின் தடை நிறுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை 500 மெகாவாட் அளவிற்கு மி‌ன்தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னேற்றங்களுக்கிடையிலும் கேரளாவிடமிருந்து தொடர்ந்து 100 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் மின் உற்பத்தி மிகவும் மோசமாக உள்ளது அதிகாரிகளிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. 340 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நெய்வேலியிலிருந்து கிடைத்து வருகிறது.

அரசும், மின்சார வாரியமும், அதிக மின் உற்பத்திக்காக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனை வலியுறுத்தி வருகின்றன.

மின் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌க்க வே‌ண்டு‌ம்: த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

த‌மிழக‌த்‌தி‌ல் ‌மி‌ன் தடை நேர‌த்தை உடனடியாக குறை‌‌‌க்க த‌‌‌மிழக அரசு‌க்கு‌ம், ‌மி‌ன்வா‌ரிய‌த்து‌க்கு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னையை சே‌‌ர்‌ந்த வசிகரன் என்பவர் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌‌ய்த பொது நலமனு‌வி‌ல், அரசின் கவனக்குறைவினால் த‌மிழக‌த்த‌ி‌ல் மின் வெட்டு ஏற்பட்டு உள்ளது. தினம் 8 மணி நேரம் ஏற்படும் மின்வெட்டினால் பொது மக்களுக்கு உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இயலாது.

அரசு ‌விழ‌ா‌க்க‌ள், அமை‌ச்ச‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்ளு‌ம் கூ‌ட்ட‌ங்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் நட‌த்து‌ம் பொது‌க் கூ‌ட்ட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌‌மி‌ன்சார‌த்தை அ‌திகமாக பய‌ன்ப‌டு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌க்கு‌ தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை ‌நீ‌திப‌தி கங்கூலி, ‌நீ‌திப‌தி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், தமிழக மின்வாரியம் மற்றும் மின்துறை அமைச்சகத்தையும் இது குறித்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு‌ம் முடிந்த அளவு மின்வெட்டை குறைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலு‌ம் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பொது கூட்டங்களை குறைத்துக்கொள்ளவும் எ‌ன்று‌ம் அறிவுறுத்தின‌ர்.

Thursday, September 4, 2008

மி‌ன் வெ‌ட்டு ஏ‌ன்? த‌‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌பி‌ன்னடை‌ந்து‌ள்ளதா‌ல், ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌க்குமாறு‌ம், ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌ம் மாலை 6 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை ‌மி‌ன்சார‌த்தை பய‌ன்படு‌த்துவதை த‌‌வி‌ர்‌க்குமாறு‌ம் த‌மிழக அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌‌மிழக அரசு ப‌த்‌தி‌ரிகைக‌‌ள் மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌விள‌க்க‌‌ம் வருமாறு: த‌மிழக‌த்த‌ி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு த‌‌‌மிழக அரசு மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌த்து வரு‌கிறது. இ‌ந்த அரசு பொறு‌ப்பே‌ற்ற ‌பி‌ன் ‌மி‌ன்வா‌ரிய‌ம் மூலமாக மூ‌ன்று ‌நிலைய‌ங்களை ‌நிறுவுவத‌ற்கு ப‌ணி‌க‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் 600 மெகாவா‌ட் ‌திற‌ன் கொ‌ண்டவையாகு‌ம்.

ம‌த்‌திய அர‌சி‌ன் கொ‌ள்கை‌‌யி‌ன் படி 4,000 மெகாவா‌ட் ‌திறனு‌ள்ள அ‌ல்‌ட்ரா மெகா பவ‌ர் ‌பிராஜ‌க்‌ட் ஒ‌ன்‌றினை செ‌ய்யூ‌ரி‌ல் ‌நிறுவுவத‌ற்கு த‌மிழக அரசு முடிவெடு‌த்து‌ள்ளது.

த‌மி‌ழ்நாடு ‌மி‌‌ன் வா‌ரிய‌த்த‌ி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டிலு‌ள்ள ‌மி‌ன் உ‌‌ற்ப‌த்த‌ி ‌நிலைய‌ங்க‌ள் ‌‌திறமையாக இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. எ‌னினு‌ம் ‌பி‌ன்வரு‌ம் காரண‌‌ங்களா‌ல் ‌மி‌ன் ‌‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை.

தெ‌ன்மே‌ற்கு பருவமழை போ‌திய அளவு இ‌ல்லாததா‌ல் த‌மிழக‌த்த‌ி‌ன் ‌நீ‌ர்‌த்தே‌க்க‌ங்‌க‌ளி‌ல் கட‌ந்த ஆ‌ண்டை ‌விட த‌ற்போது ‌நீ‌ரி‌ன் அளவு க‌ணிசமாக குறை‌ந்து‌ள்ளது. மேலு‌ம் இதர தெ‌ன் மா‌நில‌ங்க‌ளிலு‌ம் ‌மி‌ன் ‌நிலைமை ‌திரு‌ப்‌திகரமாக இ‌ல்லை எ‌ன்பதா‌ல் தெ‌ன்னக க‌ட்டமை‌ப்‌பி‌ன் செய‌ல்பாடு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌நில‌க்க‌ரி ம‌ற்று‌ம் யுரே‌னிய‌ம் த‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல் நெ‌ய்வே‌லி ம‌ற்று‌ம் இதர ம‌த்‌திய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌நிலை‌ய‌ங்க‌ளி‌லிரு‌ந்து பெற‌ப்படு‌ம் ‌மி‌ன்சார‌த்‌தி‌ன் அளவு 50 ‌விழு‌க்காடு குறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சில‌ ‌தின‌ங்களாக கா‌ற்றாலைக‌ள் மூல‌ம் பெற‌ப்படு‌ம் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியு‌ம் 1,500 மெகாவா‌ட் குறை‌ந்து‌ள்ளது. ‌பிற மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌‌ங்க மு‌ன்வ‌ந்த போ‌து‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌‌ப்‌பி‌லிரு‌ந்து த‌‌மிழக அரசு போ‌‌திய ‌மி‌ன்சார‌த்தை வா‌ங்க மு‌ன் வ‌ந்த போது‌ம் குறை‌ந்த அளவே வெ‌ளி‌ச்ச‌ந்தை‌யி‌ல் வா‌ங்க முடி‌கிறது. குறு‌கிய கால‌த்‌தி‌‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கான அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம் அரசு மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

ம‌த்‌திய தொகு‌ப்‌பி‌லிரு‌ந்து கூடுதலாக ம‌ி‌ன்சார‌ம் பெறவு‌ம், ம‌‌த்‌திய ‌மி‌ன் ‌நிலைய‌‌ங்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌ம் த‌மிழக அரசு, ம‌த்‌திய அரசை கோ‌ரியு‌ள்ளது.

செ‌ன்ற மாத‌ம் ஏ‌ற்கனவே ‌மி‌ன் ‌‌வி‌நியோக‌த்‌தி‌ல் ‌சில க‌‌ட்டு‌ப்பாடுகளை அரசு அ‌றி‌வி‌த்தது. அவை முறையாக ஜூலை 21ஆ‌ம் தே‌தி முத‌ல் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டன. ‌‌நிலைமை ‌சீரான போது ‌பல க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்‌‌ப‌ட்டன.

ஆனா‌ல் த‌ற்போது ‌மி‌ன் ‌நிலைமை ‌பி‌ன்னடை‌ந்து‌ள்ளதா‌ல் ‌சில க‌ட்டு‌ப்பாடுகளை நடைமுறை‌ப்படு‌த்துவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கி‌றது. அனை‌த்து பொது ம‌க்களு‌ம் ‌நிலைமை ‌சீரடையு‌ம் வரை அரசுட‌ன் ஒ‌த்துழை‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

‌நிலைமை ‌‌சீரடை‌ந்த உட‌ன் இ‌க்க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்‌த்த‌ப்படு‌ம். மாணவ‌ர்க‌ள் படி‌ப்பத‌ற்கு‌ம், ‌வீடுக‌ளி‌ல் மாலை நேர தேவை‌க்கு‌ம் ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்குவது அர‌சி‌ன் தலையாய நோ‌க்கமாகு‌ம். எனவே ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு‌ம் மாலை 6 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை ‌மி‌ன்சார‌த்தை பய‌ன்படு‌த்துவதை த‌‌வி‌ர்‌க்குமாறு கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறது.

இ‌ச்சமய‌த்த‌ி‌ல் ‌மி‌ன்னா‌க்‌கிகளை பய‌ன்படு‌த்து‌ம் தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கு உத‌வி செ‌ய்ய அரசு முடிவ‌ெ‌டுத்து‌ள்ளது. வ‌ர்‌த்தக மைய‌ங்க‌ளிலு‌ம், பொது ‌விழா‌க்க‌ளிலு‌ம் தேவைய‌ற்ற ஆட‌ம்பர ‌விள‌க்குகளை அமை‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் பொது ம‌‌க்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள் என தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

விமானப்படையின் மிக்-29 அரபிக்கடலில் விழுந்தது!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக விமானம் ஜாம்நகர் கடற்கரைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அரபிக்கடலில் விழுந்தது. எனினும் அதன் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஐஎன்எஸ் வல்சுரா (INS Valsura) படை தளத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்ட மிக்-29 (MiG-29) ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாகவும், எனினும் விமானி லெப்டினன்ட் தீர் (Lieutenant Dheer) உயிர் தப்பியதாகவும் கூறினார்.

இன்று மதியம் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஜாம்நகரில் இருந்து 50 கி.மீ தொலையில் உள்ள கடல்பகுதியில் விமானம் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.என்.எஸ் வல்சுரா கடற்படையினர் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரியில் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹஸிமரா பகுதியில் மிக்-27 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மிக்-21 ரன விமானம் விபத்துக்குள்ளானது நினைவில் கொள்ளத்தக்கது.

நிலக்கரியை கொண்டு செல்ல வேகன் பற்றாக்குறை இல்லை: ரயில்வே!

அண்மையில் சில ஊடகங்களில், வேகன் பற்றாக்குறையால் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியவில்லை என்று வந்திருந்த செய்திகளை மறுத்துள்ள ரயில்வே அமைச்சகம், வேகன்கள் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்திய நிலக்கரி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் திட்டமிட்டதைவிட நாளன்றுக்கு 38 வேகன்கள் குறைவாக நிலக்கரியை எடுத்துச் சென்றுள்ளன.

இதனால் கிழக்கு மத்திய ரயில்வேயில் 20 காலி வேகன்களும், தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் 30 காலி வேகன்களும், கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 10 காலி வேகன்களும், நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் இருந்தன" எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், இந்திய நிலக்கரி நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு 195 வேகன் நிலக்கரியை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தன. ஆனால் நாள் ஒன்றுக்கு 142 வேகன்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிறுவனங்களிலிருந்து ரயில்வே கிடங்குக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியாததும் காரணமாக இருக்கலாம்" என்று‌ம் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Monday, September 1, 2008

ர‌யி‌ல்வே ரூ.90 கோடி வெ‌ள்ள ‌நிவாரண‌ம்: லாலு!


பீகா‌ரி‌லவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு ‌நிவார‌ண‌மவழ‌ங்கவு‌ம், மறுவா‌ழ்வு‌பப‌ணிகளமே‌‌ற்கொ‌ள்ளவு‌மஇ‌ந்‌திர‌யி‌ல்வசா‌ர்‌பி‌லூ.90 கோடி வெ‌‌ள்ள ‌நிவாரண‌‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திர‌யி‌ல்வஅமை‌ச்ச‌ரலாலு ‌பிரசா‌தஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ர்
டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அவ‌‌ர், தனது ஒரு
மாத ச‌ம்பள‌ம், தொலை‌க்க‌ா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்றத‌ற்காக
‌கிடை‌த்த 1 கோடி ரூபா‌ய் ஆ‌கியவ‌ற்றை வெ‌ள்ள‌த்தா‌ல்
பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌த் தருவதாகவு‌ம், இதேபோல ர‌யி‌ல்வே
ஊ‌ழிய‌ர்க‌ள் அனைவரு‌ம் த‌ங்க‌ளி‌ன் ஒரு நா‌ள் ச‌ம்பள‌த்தை
வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.


மேலு‌ம்,
நா‌ட்டு ம‌க்க‌ள் அனைவரு‌ம் த‌ங்களா‌ல் இய‌‌ன்ற தொகையை ‌பீகா‌‌ர் வெ‌ள்ள‌
‌நிவாரண ‌நி‌தியாக வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்
கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.


த‌மி‌ழி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ்!

ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ் தனது ‌பிரமா‌ண்ட காலடியை த‌மி‌ழ் ‌சி‌னிமா தயா‌ரி‌ப்‌பி‌ல் எடு‌த்து வை‌க்‌கிறது. இத‌ன் முத‌ல் தயா‌ரி‌ப்பு, சூ‌ர்யா நடி‌க்கு‌ம் ‌சி‌ங்க‌ம்!

பரு‌‌த்‌தி ‌வீர‌ன், ‌‌‌ஜி‌ல்லுனு ஒரு காத‌ல் பட‌ங்களை தயா‌ரி‌த்த ‌ஸ்டுடியோ ‌கி‌‌ரீ‌ன் ஞானவே‌ல் அடு‌த்து சூ‌‌‌ர்யா நடி‌ப்‌பி‌ல் ஹ‌ரி இய‌க்கு‌ம் ‌சி‌ங்க‌ம் பட‌த்தை தயா‌ரி‌க்‌கிறா‌ர். கே.‌வி.ஆன‌ந்‌தி‌ன் அய‌ன் முடி‌ந்த ‌பிறகு ‌சி‌ங்க‌ம் ‌சீ‌றி‌ப் பா‌ய்‌கிறது.

இதனை ஞானவே‌லி‌ன் ‌ஸ்டுடியோ ‌கி‌‌ரீ‌ன், ‌‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸூட‌ன் இணை‌ந்து தயா‌ரி‌க்‌கிறது. ‌பி‌ப்ரவ‌ரி‌யி‌ல் இதே கூ‌ட்ட‌ணி தயா‌ரி‌க்கு‌ம் பட‌த்‌தி‌ல் சூ‌‌ர்யா‌வி‌ன் த‌ம்‌பி கா‌ர்‌த்‌தி கதாநாயக‌ன். இய‌க்க‌ம் சுரா‌ஜ்.

‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸி‌ன் இ‌வ்‌விரு பட‌ங்களு‌ம் ‌பிரமா‌ண்ட ப‌ட்ஜெ‌ட்டி‌‌ல் தயாரா‌கி‌ன்றன. ‌சி‌‌ங்க‌த்து‌க்கே‌ற்ற பு‌ள்‌ளிமானை பட‌த்து‌க்காக தேடி வரு‌கிறா‌ர் ஹ‌ரி. மா‌ன் அக‌ப்ப‌ட்டது‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கு ‌கிள‌ம்பலா‌ம் என கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.