Search

Custom Search

Friday, March 28, 2008

மோட்டோரோலா புதிய மென்பொருள் அறிமுகம்

இந்தியாவில் மொபைல் மெசேஜிங்கிற்காக புதிய குட்-5 மென்பொருளை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதியவகை மென்பொருளானது மொபைல் சந்தையில் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் நியூஸ் ஃபீட்ஸ், மின்னஞ்சல்களுக்கான முன்னறிவிப்பு, பில்டர்ஸ், முழு அளவிலான சோதனை, தானாகவே இயங்கக்கூடிய கான்பரன்ஸ் அறை தேடுதல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை புதிய மென்பொருள் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மின்னஞ்சல் பயன்பாடு முதல் பரிவர்த்தனை அடிப்படையிலான பயன்பாடுகள் வரை மோட்டோரோலா குட் தொழில்நுட்பத்தில் எளிதில் இடம்பெற்றிருக்கும் என்றும், எந்தநேரத்திலும், தகவல் தொடர்பு கருவிகளுடன் கிடைக்கும் என்றும் மோட்டோரோலா இந்தியாவின் மேலாளர் அனிருத் குப்தா தெரிவித்துள்ளார்.

பழைய படங்களின் பெயருக்குக் கட்டுப்பாடு

அபூர்வ சகோதரர்கள், சதி லீலாவதி, தசாவதாரம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. கமல் நடித்தப் படங்கள் என்பதைத் தாண்டி இவை அனைத்தும், ஏற்கனவே வெளிவந்த படங்களின் பெயர்கள்.
கமலின் புதிய படம் மர்ம யோகியும் பழைய படத்தின் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தொடர்ந்து பழைய படங்களின் பெயர்களை வைப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
புதிய படங்களுக்கு பழைய பெயர்களை வைப்பதை, பழைய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. தங்கள் படங்களை அவர்கள் ரீ-மேக் செய்ய விரும்பும்போது அதே பெயரில் வேறு கதையை வைத்து ஏற்கனவே படம் வெளிவந்திருக்கும். இது தங்களுக்கு தலைவலியாக இருப்பதாக தயாரிப்பாளர்களும், அவர்களது வாரிசுகளும் புகார் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இனி பழைய படங்களின் பெயர்களை வைக்க விரும்புகிறவர்கள், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என நிபந்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
`தசாவதாரம்' படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது என்பதால் இந்த நிபந்தனை தசாவதாரத்தை கட்டுப்படுத்தாது. அதே நேரம், `மர்ம யோகி' படத்துக்கு கமல் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும்.
ராஜ்கிரணின் மலைக்கள்ளன், தனுஷின் படிக்காதவன் படங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமாம்.