இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரோலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவலின் கடைசி புத்தகத்தை, இரண்டு திரைப்படங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல மொழிகளில் வெளியான ஹாரிபாட்டர் திரைப்படம் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதுடன் வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்தது.
இந்தக் கதையை எழுதியதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரோலிங், இதன் கடைசி அத்தியாயத்தை (7வது புத்தகத்தை) கடந்த சில மாதங்களுக்கு முன் எழுதி முடித்தார்.
இந்த அத்தியாயத்துடன் ஹாரிபாட்டர் படத்தொடர் நிறைவடைய உள்ளதால், இதனை 2 பாகங்களாக தயாரிக்க வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஹாரிபாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோஸ்-முதல் பாகம் (Harry Potter and the Deathly Hallows: Part -1) 2010 நவம்பரிலும், இரண்டாம் பாகம் 2011 மே மாதமும் வெளியாகும் என தயாரிப்பாளர் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஹாரிபாட்டரின் 6வது புத்தகமான தி ஹால்ஃப்-பிளட் பிரின்ஸ் (The Half-Blood Prince), வரும் நவம்பரில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

