Search

Custom Search

Wednesday, April 2, 2008

தமிழகத்தில் கன்னட சேனல்களுக்கு தடை பிளாஸ்மா டிவி

பிளாஸ்மா டிவி
ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மொழி தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு, தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்படத் துறையினர் வரும் 4ம் தேதி சேப்பாக்கத்தில் நடத்தும் உண்ணாவிரத்ததில் கேபிள் டிவி சங்கங்களும் கலந்து கொள்ளும் என்றார்.
ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்புகளின் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து கன்னட சேனல்களையும் தடை செய்யும்படி கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் காயல் இளவரசு கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக, கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன.
அதற்கு பதிலடி தரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உண்ணாவிரதத்தில் ரஜினி பங்கேற்கிறார்?

ரஜினிகாந்த்
கன்னட அமைப்புகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலம் சார்பில் 4ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தற்போது அவர் சென்னை வந்துள்ளதாகவும், ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக- கர்நாடக மாநிலங்கள் இடையே ஒகேனக்கல் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் தத்தமது மாநிலங்களுக்கு ஆதரவாக இரு மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத் துறையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவரான நடிகர் ரஜினிகாந்துக்கு இவ்விவகாரம் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் கன்னட ஆதரவாளர் என்ற முத்திரை அவருக்கு குத்தப்படும்.
மேலும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தமிழ் உலகுக்கு ஆதரவாகவே எப்போதும் இருக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே 4ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்தில் அவர் கலந்து கொள்வது உறுதி என்று கூறப்படுகிறது.
காவிரி நதிநீர் பிரச்சனையில் திரையுலகத்தினர் குதித்தபோது ரஜினியும் கலந்து கொண்டார்.
எனினும், நெய்வேலியில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம் நடத்தியபோது சென்னை சேப்பாக்கத்தில் ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரை சந்திக்கிறார் கர்நாடக ஆளுநர்

ராமேஷ்வர் தாக்கூர்
ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அசாதாரண சூழ்நிலையில் நிலவும் நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கை மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் இன்று சந்திக்கிறார்.
பிரதமரை உடனடியாக சந்திக்கும்படி தலைநகரில் இருந்து நேற்றிரவு அழைப்பு வந்ததாகவும், இதையடுத்து இன்று காலை புதுடெல்லிக்கு ஆளுநர் செல்லவிருப்பதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று பிற்பகல் வாக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
கர்நாடக சட்டம்- ஒழுங்கு நிலை, தமிழர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் பிரதமர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா- எஸ்.எம். கிருஷ்ணா ஆலோசனை
இதற்கிடையே, ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எம்.எம். கிருஷ்ணாவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று மாலை நடந்த இச்சந்திப்பின்போது, ஒகேனக்கல் விவகாரத்தை பயன்படுத்தி பாரதிய ஜனதா ஆதயம் தேட முற்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

ஒகேன‌க்க‌ல்: பிரதம‌ரிட‌ம் டி.ஆ‌‌ர்.பாலு வ‌லியுறு‌த்த‌ல்

டி.ஆர்.பாலு
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் த‌மிழக‌த்தின் நிலையை ‌‌‌‌விள‌க்‌கியதுடன், இத்‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற எ‌‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌க்க‌க் கூடாது எ‌‌ன க‌ர்நாடகாவு‌‌க்கு அ‌றி‌‌வுரை வழ‌ங்க வே‌ண்டு‌மென ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் சி‌ங்‌கிட‌ம் அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு நே‌ரி‌ல் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
டெ‌ல்‌லி‌யி‌ல் இன்று ‌பிரதம‌ரை ச‌‌ந்‌தி‌த்த ம‌த்‌‌திய க‌ப்ப‌ல் ம‌ற்று‌ம் தரைவ‌ழி‌ப் போ‌க்குவர‌த்து‌ துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பாக த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நேற்று ஒருமனதாக நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் நகலையு‌ம், முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கிய கடி‌த‌த்தையு‌ம் அ‌ளி‌த்தா‌ர்.
இ‌ந்த ‌விவகார‌ம் தொட‌ர்பாக இர‌ண்டு மா‌நில‌ங்களு‌ம் கல‌ந்து கொ‌ண்ட கூ‌ட்ட‌த்‌தையடு‌த்து கட‌ந்த 1998‌ம் ஆ‌ண்டு ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற தேவையான அனை‌த்து அனும‌தியையு‌ம் ம‌த்‌திய அரசு த‌மிழக‌ அரசு‌க்கு வழ‌ங்‌கியதை டி.ஆ‌ர்.பாலு ‌‌‌பிரதம‌ரிட‌ம் சுட்டிக்காட்டினார்.
ம‌‌த்‌திய சு‌ற்று‌ச்சூழ‌ல் ம‌ற்று‌ம் வ‌ன‌த்துறை, நக‌ர்‌ப்புற ‌விவகார‌ம் ம‌ற்று‌ம் ‌கிராம மே‌ம்பா‌ட்டு‌த் துறை அமை‌ச்சக‌‌ங்க‌ளிட‌ம் இரு‌ந்து‌ம் த‌மிழக அரசு தேவையான அனை‌த்து அனும‌திகளையு‌ம் பெ‌ற்று‌ள்ளதாக பாலு தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.
ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றுவது மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், இத‌ற்காக ஜ‌ப்பா‌ன் வ‌ங்‌கி ரூ.1,334 கோடி ‌நி‌தி வழ‌ங்க மு‌ன்வ‌ந்து‌ள்ளதையு‌‌ம் கூ‌றிய அவ‌ர், வற‌ட்‌சி பகு‌திகளான ‌‌‌கிரு‌ஷ்ண‌கி‌ரி, த‌ர்ம‌‌பு‌ரி மாவ‌ட்ட‌ங்களு‌க்கு இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் குடி‌நீ‌ர் வழ‌ங்க முடியு‌ம் எ‌ன்று‌ம் பிரதமரிடம் விளக்கியுள்ளார்.
மு‌ன்னதாக இ‌ன்று மு‌ன்னா‌ள் க‌ர்நாடகா முத‌ல்வ‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ச‌ந்‌தி‌த்து ம‌த்‌திய அரசு தனது செ‌ல்வா‌க்கை‌ பய‌ன்படு‌த்‌தி ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌தேர்தல் முடியும் வரையிலாவது நிறு‌த்‌தி வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌‌சிய முதல்வர் கிருஷ்ணா, க‌ர்நாடகா‌வி‌ல் அடு‌த்த மாத‌ம் பு‌திய அரசு பத‌வியே‌ற்க உ‌ள்ளதாகவு‌ம், இதையடு‌த்து இ‌ந்த ‌பிர‌ச்‌சினை கு‌றி‌த்து இரு மா‌நில‌ அரசுகளு‌ம் பே‌ச்‌சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி ‌‌‌‌‌தீ‌ர்வு காணலா‌ம் எ‌ன்று‌‌ம் தெரிவித்தார்.

சுஸ்மிதாவுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: வாலிபர் கைது சுஸ்மிதா சென்

சுஸ்மிதா சென்
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஸ்மிதா சென்னுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய டெல்லி வாலிபரை, மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வந்ததால், மும்பை கார் (Khar) காவல்நிலையத்தில் சுஸ்மிதா சென் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்து வந்த கார் போலீசார், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவர் டெல்லியை சேர்ந்த ஆம்பர் பிபிச்சர் என்று கண்டறிந்தனர். இதையடுத்து இன்று டெல்லி சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் பி.காம் படித்து வந்ததுடன், பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்ததும், டெல்லியின் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் மும்பை கொண்டு வரப்பட்ட ஆம்பர், பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக கார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இவர் ஏற்கனவே சுஸ்மிதா சென்னுக்கு அனுப்பிய கூரியரில், பல ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரயில் கட்டண குறைப்பு இன்று முதல் அமல்

ரயில்
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பயணிகள் பயணச்சீட்டுக்கான கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலாகிறது. இதற்கிடையில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் செலுத்திய கூடுதல் தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மக்களவையில் தாக்கல் செய்த 2008-09ம் ஆண்டுக்கான ‌ரயில்வே நிதிநிலை அறிக்கையில், 2ம் வகுப்பு பயணிகள் கட்டணம் 5 சதவீத அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் குறைக்கப்பட்ட புதிய கட்டணங்களின் படி இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதற்கேற்றவாறு கணினிகளில் கட்டண விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அதற்கு பின்னர் பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு மையங்களில் செலுத்தி, கூடுதலாக வழங்கிய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு தனி நாடு: விக்ரமநாயகே கருத்து

இலங்கையில் இருந்து தமிழர்களுக்காக தனியாகப் பிரித்து தனி மாகாணத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ஒருவர் முதல் முறையாக இஸ்ரேலுக்குச் சென்றுள்ள நிலையில், ஜெருசலமில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதுபோன்று தனி மாகாணம் உருவாக்குவது இந்தியாவில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இலங்கையின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை தொடர இந்தியா எப்போதும் விரும்புவதாகவும் விக்ரமநாயகே கூறினார்.
இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழர்களுக்கென்று தனிநாட்டை உருவாக்க எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் விரும்புவதாகவும் இலங்கை பிரதமர் குறிப்பிட்டார்.
சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவே விரும்புவதாகவும், ராணுவ ரீதியான தீர்வை கோரவில்லை என்றும் அவர் கூறினார்.