கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் ஏப்ரல் 25-ல் நடக்கிறது.
ஜாக்கிசான், அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதால, விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளன.
50 கோடி ரூபாய் செலவில், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நடைபெறவுள்ள விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகர் விஜய், நடிகைகள் அசின், ஹேமாமாலினி, மல்லிகா ஷெராவத் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகர் விஜய், நடிகைகள் அசின், ஹேமாமாலினி, மல்லிகா ஷெராவத் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
`தசாவதாரம்' பாடல்களை ஜாக்கிசான் வெளியிட அமிதாப்பச்சன் பெற்றுக்கொள்கிறார். படத்தின் டிரைலரும், தயாரான விதமும் திரையிடப்படுகிறது.
ஜாக்கிசான் நடித்துள்ள படங்களை இந்தியாவில் விநியோக உரிமை எடுத்து தாம் திரையிட்டுள்ளதால். ஜாக்கிசான் தனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், தசாவதாரம் படப் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் சம்மதித்ததாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
downloads will be available in:http://www.tamilmachi.blogspot.com/
downloads will be available in:http://www.tamilmachi.blogspot.com/