Search

Custom Search

Monday, May 12, 2008

ஜிபிஎஸ் வசதியுடன் செல்போன்: ஹெச்டிசி அறிமுகம்

தைவான் நாட்டின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹை-டெக் கம்ப்யூட்டர் கார்பரேஷன் (HTC corporation), குரூய்ஸ் என்ற அதிநவீன செல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹெச்டிசி டச் (HTC Touch) செல்போன் வரிசையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குரூய்ஸ் (HTC Touch Cruise) போனில், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் எனப்படும் ஜிபிஎஸ் வசதி உள்ளது.
மின்னஞ்சல், குறுஞ்செய்தி, நாள்காட்டி, தொடர்பு எண்கள், வானிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இந்த செல்போனில் உள்ள ஆட்டோ-ஃபோகஸ் கேமரா 3 மெகா பிக்சல் திறன் கொண்டது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
2.8 இன்ச் அகலம் கொண்ட வண்ணத்திரை, எஃப்.எம் ரேடியோவுடன் கூடிய இந்த போன் விண்டோஸ் மொபைல் 6 புரொபஷனல் மென்பொருளில் இயங்கும் என ஹெச்டிசி குறிப்பு தெரிவிக்கிறது.
மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த செல்போனின் விலை ரூ.32,990 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

`வாக்கி டாக்கி' : டாடா இண்டிகாம் அறிமுகம்

வெகுவேகமாக முன்னேறி வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான டாடா இண்டிகாம், வீட்டு போன் பிரிவில் `வாக்கி டாக்கியை' அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தில் அடங்கிய ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்து வரும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், கர்நாடகத்தில் இந்த வாக்கி டாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள சந்தை பங்களிப்பை 60 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
தற்போது ரூ. 1,399 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்கிடாக்கி, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கும், ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு போன்கள் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில், அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய வாக்கி வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநருக்கு தனி ஆணையகம்

முதலமைச்சர் கருணாநிதி
சென்னை மாநகர காவல் துறை ஆணையகத்தை பிரித்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு என்று தனி ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருச்சிராப்பள்ளி நகரில் புதிய காவல் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். இவ்வாண்டில் ரூ. 110 கோடி செலவில் 2,000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு, புதியதாக சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழுநேர காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். இதன்படி மாநிலத்தில் உள்ள 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, கம்பம், காரைக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.சென்னை அருகே செம்மஞ்சேரி மற்றும் வேலூர் மாவட்டம் அரியூரில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும்.