Search

Custom Search

Saturday, May 24, 2008

கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - சச்சின்


சச்சின் டெண்டுல்கர்
இந்திய பிரிமியர் லீக் டுவெண்டி -20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது தமக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றும், இந்தப் பொறுப்பு ம்கிழ்ச்சி அளிப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில், தமது அனுபவம் சிறப்பான வகையில் அமைந்திருப்பதாகக் கூறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நடுக்கள ஆட்டக்காரராக இறங்குவதை தாம் விரும்புவதாகவும் சச்சின் கூறினார்.
சர்வதேச கேப்டன்களான போல்லாக், சனத் ஜெயசூர்யா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பதால் தமது பணி எளிதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிவியை முந்துகிறது இணையதளம்: ஆய்வு


அகண்ட அலைவரிசை இணையதள (பிராட்பேண்ட்) இணைப்பு வைத்துள்ளவர்கள் வீட்டில், டிவி பெட்டிகளை விட கணினிகளே அதிக நேரம் பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஸ்கோ என்ற நிறுவனம் சார்பில், பிராட்பேண்ட் இணைப்பு உள்ளவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு வார காலத்தில் அவர்கள் வீட்டில் உள்ள கணினிகள் 22 மணிநேரம் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அதே காலத்தில் அவர்களது டிவி பெட்டிகள் 14 மணி நேரம் மட்டுமே இயங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி இணையதளத்தில் தாங்கள் விரும்பிய திரைப் படங்களை பதிவிறக்கம் செய்வது, கண்டு ரசிப்பதுமே இதற்கு காரணம் என சிஸ்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 864 வீடுகள் மற்றும் நியூசிலாந்தின் 219 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இணையதளத்தில் குறும்படங்கள் மற்றும் பிற திரைப்படங்களை காண்பது மிகவும் வசதியாக (விளம்பரங்கள் தொல்லையின்றி) உள்ளதால் இணையத்தில் படம் பார்ப்பதை விரும்புவதாக ஆய்வில் பங்கேற்ற 51 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டிலும் இதேநிலை ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி சாத்தியமானால் தற்போதைய டிவி சேனல்களுக்கு போட்டியாக இணையதளங்களும் கவர்ச்சிகர விளம்பரங்களை ஒளிபரப்பலாம்.
இதே சில சாம்பிள்கள்... 'உலக இணையதள வரலாற்றில் முதன் முறையாக'... அல்லது 'லெஸி வித் மீனூ' என்பது போன்ற விளம்பரங்களும் உங்கள் கணினி திரையில் துள்ளி விளையாடலாம்...

'மானிய விலையில் பிராட்பேண்ட் இணைப்பு'


ஆ.ராசா
பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மானிய விலையில் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.
கிராமப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளிலும் தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.
கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைத்திருப்பதாகவும், மிகவும் பின் தங்கிய பகுதியில் இருக்கும் 14,183 கிராமங்கள் கண்டறியப்பட்டு அங்கு தொலைப்பேசி இணைப்புகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் மாதம் ஒன்றுக்கு 80 லட்சம் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், வரும் 2010-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என்றார்.
பிரபல தேடுதல் சேவை நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் கூகிள் எர்த் என்ற சேட்டிலைட் இமேஜ் வடைபட சேவைக்குப் போட்டியாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ சேட்டிலைட் வரைபட சேவையை வழங்க உள்ளது.
இஸ்ரோவின் சேட்டிலைட் சேவை அடுத்த 6 மாதத்தில் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் ஜி. மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இமேஜ் (படங்கள்) அனைத்தும் இஸ்ரோவின் இணைய தளங்களில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கருதப்படும் பகுதிகள் இமேஜாக வெளியிடுவதற்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கும் என்றும், ஏனைய இமேஜ் அனைத்தும் இணையத்தில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான ரிமோட் சென்சிங் சேட்டிலைட்டுகளை கொண்டிருப்பது இந்தியா என்றும் அவர் கூறினார்.