Search

Custom Search

Thursday, May 29, 2008

ரீமிக்ஸ் பாடலால் பெருமையில்லை- பரத்வாஜ்

இசையமைப்பாளர் பரத்வாஜ்
ரீ-மிக்ஸ் பாடல்கள் சமீப காலமாக தமிழ்ப் படங்களில் அதிக அளவில் இடம்பெற்று வரும் நிலையில், அதுபற்றி பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் அளித்த பேட்டி....
ரீமிக்ஸ் பாடல்களை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ரீமிக்ஸ் பாடல்கள் தேவையில்லை. அதனால் இசையமைப்பாளருக்கு எந்தப் பெருமையும் இல்லை. எனவே அதுபோன்ற பாடல்களில் எனக்கு உடன்பாடில்லை.
பழைய படங்களின் கதையுடன் வெளியாகும் படங்களுக்கு அவசியம் இல்லையா?
அஜீத்தின் `பில்லா' போன்ற படத்துக்கு ரீமிக்ஸ் பாடல் அமைத்ததை நான் வரவேற்கிறேன். காரணம், பழைய படத்தின் கதை, அதே சூழ்நிலை இருப்பின் ரீமிக்ஸ் பாடல் கம்போஸ் செய்யலாம்.
ஆனால் முன்பு ஒரு படத்தின் கதை, சூழலுக்காக உருவாக்கப்பட்ட பாடலை, இப்போது புதுப்படங்களில் பயன்படுத்துகிறார்கள். அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.
ரீமிக்ஸ் பாடலால் ஏற்படும் பாதிப்பாக எதை கருதுகிறீர்கள்?
ரீமிக்ஸ் பாடல்களுக்காக பழைய பாடகருக்கோ, இசையமைப்பாளருக்கோ, பாடலாசிரியருக்கோ எந்தவித சன்மானமும் வழங்கப்படுவதில்லை. புதிய பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
உங்கள் படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் அமைப்பீர்களா?
முடிந்தவரை ரீமிக்ஸ் பாடல்களை தவிர்ப்பேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் வற்புறுத்தும் பட்சத்தில், அதை மீற முடியாது என்று பரத்வாஜ் கூறினார்.

அதிவேக பிராட்பேண்ட் சேவை: சிஃபி அறிமுகம்

இணையதள சேவை வழங்கி வரும் நிறுவனமான சிஃபி, ஐ-பாஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய சேவை மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமானநிலையம், உணவு
விடுதிகள், சில்லரை வணிக வளாகங்கள் என ஒரு லட்சம் இடங்களில் (சர்வதேச
அளவில்) கிடைக்கும் என்று சிஃபி (Sify) நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நாத்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய
சேவையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களின் மடிக்கணினிகள்,
செல்போன்கள் மூலம் இணைய சேவையை பயணத்தின் போதே பயன்படுத்த முடியும் என்பதே
இதன் சிறப்பம்சம்.

இந்திய இணையதள சேவைச் சந்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில்
செல்வதால், ஐ-பாஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் ஒரு
பகுதியாகவே சிஃபி நிறுவனத்துடன் இணைந்து 'ரோம் கனெக்ட் இன்டர்நேஷனல்'
பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் ஐ-பாஸ் நிறுவன
மூத்த அதிகாரி ஷீ-லெங் லாய் தெரிவித்தார்.