Search

Custom Search

Thursday, July 17, 2008

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் ஹாங்காங்!

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 7வது ஆண்டாக பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் சிறப்பான விமான நிலையங்கள் குறித்த பட்டியலில் ஆசிய விமான நிலையங்களே இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

பிரிட்டன் நாட்டின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சிறந்த விமான நிலையத்திற்கான கருத்துக் கணிப்பை பயணிகளிடம் நடத்தியது.

கடந்த
2007-2008ஆம் ஆண்டின் 10 மாத காலத்தில் 8.2 மில்லியன் விமான பயணிகளிடம்
நடத்திய கருத்துக் கணிப்பில், மொத்தம் 190 விமான நிலையங்களில்
வழங்கப்படும் பல்வேறு வசதிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.


இதன்
அடிப்படையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் உலகளவில் முதலிடத்தை
பிடித்துள்ளது. அங்குள்ள வசதிகள் மற்றும் திறன்மிக்க செயல்பாடு காரணமாக
அந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹாங்காங்கிற்கு
அடுத்தடுத்த இடங்களை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம், சியோல் நாட்டில்
உள்ள இன்சியோன் விமான நிலையம் ஆகியவை பிடித்துள்ளன.


கோலாலம்பூர், மலேசியா, மற்றும் ஜப்பான் நாட்டு ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

ஜெர்மனியின்
முனிச் நகரில் உள்ள விமான நிலையம் ஐரோப்பிய அளவில் முதலிடத்தையும்,
சர்வதேச அளவில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


[Airpot]

பீபி கா மக்பாரா - தாய் பாசத்தின் சின்னம்!








இவ்வுலகில் காதலின் சின்னம் எது என்று கேட்டால், அதற்கு பதில் தெரியாத எவரும் வாலிபத்தைக் கடந்தவராக இருக்க முடியாது.

ஆம்.
தனது காதல் மனைவி மும்தாஜ் பேகத்திற்கு முகலாய பேரரசர் ஷா ஜஹான் எழுப்பிய
அந்த காதல் கோயிலை, தாஜ் மஹாலை காணாதவர் இருக்கலாம். அறியாதவர் யார்?


webdunia photoWD
ஆனால்
தனது தாயின் மீது கொண்ட பாசத்தால் மகன் கட்டிய பாசச் சின்னம் ஒன்று நமது
நாட்டில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் முகலாய வம்சத்தில்
வந்ததொரு இளவரசன் கட்டியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?


தாஜ்
மஹாலைப் போல அதுவும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும்
நமது நாட்டின் பாரம்பரிய சின்னம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஆம், அசப்பில் தாஜ் மஹாலைப் போன்றே தோற்றமளிக்கும் இந்தப் பளிங்குக் கோயில்தான் அது.

பீபி கா மக்பாரா என்றழைக்கப்படும் இந்த தாய்ப் பாசத்தின் சின்னத்தை கட்டியது அசம் கான் என்ற இளவரசர்.

webdunia photoWD
மொகலாய
பேர்ரசர்களில் மிகக் கொடுமையானவர் என்று வரலாற்றில் வர்ணிக்கப்படும்
ஒளரங்கசீப்பின் மனைவி தில்ராஸ் பானோ பேகத்திற்குப் பிறந்த அசம் கான், தன்
தாயின் மீது கொண்ட பாசத்தினை வெளிப்படுத்தக் கட்டிய இச்சின்னம் மராட்டிய
மாநிலம்
ளரங்காபாத்தில் உள்ளது. 1651-61ஆம் ஆண்களில் கட்டி முடிக்கப்பட்டது.

அழகிய
சூழலில் அமைந்துள்ள இதன் மையத்தில் தில்ராஸ் பானோ பேகத்தின் கல்லறை
உள்ளது. தாஜ் மஹாலைப் போலவே கட்டப்பட்டுள்ளதால் இதனை அதன் சிறிய
பிரதிபலிப்பு என்று கூறுவார்கள்.


மாலைப் பொழுதில் இவ்விடத்திற்கு செல்வது மனதிற்கு இதமான அனுபவம்.














வீடியோவைப் பாருங்கள்

ப‌ரிசோதனை‌யி‌ல் லினக்ஸ் செல்பேசிகள்!

செல்பேசியில் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் தற்போது பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கலிஃபோர்னியாவில் உள்ள அஸிங்கோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்த லினக்ஸ் பயன்பாட்டு செல்பேசிகள் முதலில் ஐரோப்பிய சந்தைகளில் 2009-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ‌ந்த வச‌தி கொ‌ண்ட செ‌ல்பே‌சிக‌ள் இந்தியாவில் 2010ஆம் ஆண்டு முதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது பரிசோதனை மாதிரி செல்பேசிகளை வெளியிட்டுள்ள அஸிங்கோ நிறுவனத்தின் உயரதிகாரி இது பற்றி கூறுகையில், இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வந்ததுதான் என்றும், இதன் முதல் வணிக அனுப்பீடு ஐரோப்பிய சந்தைகளுக்கு செல்கிறது என்றார்.

இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அஸிங்கோ மையங்களில் நடைபெற்றது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பாடுகளை தயாரிப்பவர்கள் ஆகியோர், "சி" சி++ மென்பொருளில் அப்பளிகேஷன்களை உருவாக்கவும், ஜாவா, ஜாவா ஸ்க்ரிப்டை பயன்படுத்தி வெப் அப்ளிகேஷன்களை உருவாக்கவும் வசதி அமைத்துத் தரப்படும் என்று அஸிங்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் லினக்ஸ் பயன்பாட்டு செல்பேசிகளுக்கான தேவை 2 பில்லியன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்து வரும் சைபர் கஃபேக்கள்!

இந்தியாவில் மின்னஞ்சல் அல்லது இணையதளங்க‌ளி‌ல் உலவ வேண்டுமெனில் பிரவுசிங் சென்டர்கள் என்று அழைக்கப்படும் இணையதள மையங்கள்தான் முக்கியமான இடமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மையங்களின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் கடுமையாக குறைந்துள்ளது.

சி.ஐ.ஐ.-ஐ.எம்.ஆர்.பி. பிராண்ட் பேன்ட் வெளியிட்டுள்ள தகவலின் படி 2004, 2005ஆம் ஆண்டுகளில் சுமார் 60 விழு‌க்காடு வளர்ச்சி விகிதம் கண்ட இந்தத் துறை 2008-ல் 20 விழுகாடாக குறைந்துள்ளது.

நாட்டில் சுமார் 1,80,000 சைபர் கஃபேக்கள் உள்ளது. பெரிய அளவில் இந்த மையங்களை நடத்துபவர்கள் இந்த சரிவிற்கு காரணமாக, அரசு சலுகைகள் இன்மை, கணினி பாதுகாப்பு இடர்பாடுகள், சைபர் கஃபே உரிமையாளர்களுக்கு பல்வேறு விதங்களில் கொடுக்கப்படும் இடையூறுகள் ஆகியவையே என்று கூறுகின்றனர்.

பூனா உள்ளிட்ட சில நகரங்களில் "சைபர் கஃபே" துவங்க வேண்டுமென்றால், நகராட்சி சுகாதாரத் துறையிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஏனெனில் "கஃபே" என்ற பின்னொட்டு உள்ளதால் இந்த விசித்திர நடைமுறை இருந்து வருகிறது. கஃபே என்றால் சிற்றுண்டிச் சாலை என்றுதானே பொருள். இதனால் சைபர் கஃபேயிற்கும் ஒருவர் சுகாதாரத் துறை அனுமதி பெறவேண்டுமாம்.

மேலும் காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் ஒன்றையும் பெற வேண்டியது அவசியமாகிறது. சைபர் கஃபே உரிமையாளர்களுக்கு உள்ளூர் காவல்துறையினர் தரும் கடும் தொல்லைகளும் இந்த மையங்கள் குறைந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

2002-ஆம் ஆண்டு 85 விழுக்காடு வளர்ச்சி கண்ட சைபர் கஃபேக்கள் இன்று கடுமையாக குறைந்து 20 விழுக்காடாகியுள்ளது என்று சி.ஐ.ஐ.-ஐ.எம்.ஆர்.பி. ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்திய இணையதள சேவை வழங்குவோர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ் சாரியா இது பற்றி பத்திரிக்கை ஒன்றில் கூறுகையில், வாடிக்கையாளர்கள் அடையாள நிரூபணம் உட்பட அவர்கள் பிரவுஸ் செய்த இணையதள முகவரிகள் அனைத்தையும் ஒருவர் தக்க விதத்தில் பராமரித்து வர நேரிடுகிறது, பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் தேவையில்லை ஆனால் சைபர் கஃபேக்களுக்கான தனித்த மையச் சட்டம் ஒன்றை அமல் செய்ய வேண்டும், உள்ளூர் காவல்துறை தலையீட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுத் தொலைபேசி மையங்களுக்கும் சைபர் கஃபேக்களுக்குமான விதிமுறைகளில் அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும், 2002 ஆம் ஆண்டு சைபர் கஃபேக்கள் பெருகிய அளவிற்கு இனிமேல் வாய்ப்பில்லை என்றுதான் இந்தத் துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.