கொழும்புவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின்போது (சார்க்) போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுத்துள்ள அறிவிப்பை சிறிலங்க அரசு நிராகரித்துள்ளது."
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள சிறிலங்க அரசு தயாராக இல்லை" என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததாக, சிறிலங்க அரசின் தகவல் ஒளிபரப்பு ஸ்தாபனம் (எஸ்.எல்.பி.சி.) இன்று காலை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தது."
போர் முனையில் ராணுவரீதியாகத் தாங்கள் பலவீனமடையும்போது, பேச்சுக்களை நடத்துவதன் மூலம் தங்களின் பலத்தைப் புதுப்பித்துக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பின்பற்றும் தந்திரம்தான் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பு. இத்தகையை தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குள் தலையிடும் அவசியம் சிறிலங்க அரசிற்கு இல்லை" என்று கோத்தபாய ராஜபக்ச கூறியதாக (எஸ்.எல்.பி.சி.) தெரிவிக்கிறது. "
அப்படி நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நம்ப வேண்டும் என்றால், அவர்கள் முதலில் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பு நார்வே மூலம் வெளியிடப்பட வேண்டும் என்று சிறிலங்க அரசு எதிர்பார்ப்பதாக அரசின் அமைதிச் செயலகத்தின் செயலர் டாக்டர்.ராஜிவ் விஜசிங்கே கூறியுள்ளார். "
எங்களுக்கு அமைதி வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதியை நிச்சயம் விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் தங்களது போர்நிறுத்த அழைப்பை எங்களிடம் நேரடியாக விடுக்கிறார்களா அல்லது நார்வே மூலம் விடுக்கிறார்களா என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்" என்று விஜசிங்கே கூறியதாக ஏ.எஃப்.பி நிறுவனம் தெரிவிக்கிறது. "
இதற்கமுன்பு பலமுறை, தங்களின் படை பலத்தை பெருக்குவதற்கான அவகாசத்தை பெறும் பொருட்டு இதுபோன்ற அறிவிப்புகளை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கிறார்கள். நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

[Cricket team]
இலங்கைக்கு
சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக
கொழும்பு நகரில் நாளை துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.இந்திய
அணியில் கவுதம் கம்பீர், சேவாக், திராவிட், சச்சின், கங்கூலி, லஷ்மண்,
தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், ஜாகீர்கான், அணித் தலைவர் கும்ப்ளே,
முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இலங்கை
அணியில் மைக்கேல் வன்டர்ட், மலின்டா வர்னபுரா, சங்கக்காரா, அணித்
தலைவர் ஜெயவர்த்னே, சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்சான், பிரசன்ன
ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா,
நுவான் குலசேகரா, சமர கபுகேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.போட்டி
நாளை காலை 10.15 மணிக்கு துவங்குகிறது. இலங்கையின் இளம் சுழற்பந்து
வீச்சாளர் மெண்டிஸை, இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ள உள்ளனர், டெஸ்ட்
போட்டிகளில் அதிக ரன் எடுத்த லாராவின் சாதனையை சச்சின் முறியடிப்பாரா
என்று இந்திய ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது!நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நேற்று காலை முதல் இன்று மாலை 7.20 மணி வரை நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க எழுந்தபோது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார். இதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரன் மூலம் வாக்களிக்கப்பட்டது. 487 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் அரசிற்கு ஆதரவாக 253 உறுப்பினர்களம், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதன்பிறகு வாக்குச் சீட்டில் வாக்களித்த உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார். நம்பிக்கை தீர்மானத்திற்கு (அரசிற்கு) ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவானதாக கூறிவிட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை முடிக்கப்பட்டது. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முனைப்பாக செயல்பட்டதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதில் முடிந்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுத்துவது உறுதியாகிவிட்டது. [manmaohan]