Search

Custom Search

Friday, August 8, 2008

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நாளை கோலாகல துவக்கம்!


உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பீஜிங் ஒலிம்பிக் போட்டி, பறவைக் கூடு (Birds Nest) மைதானத்தில் நாளை (வெள்ளி) கோலாகல துவக்க விழாவுடன் துவங்குகிறது. துவக்க விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பீஜிங்கிற்கு வருகை தந்துள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.45 மணியளவில் துவங்கும் முதல்கட்ட துவக்க விழா ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கிறது. இதில் அந்நாட்டு தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 28 கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலைநிகழ்ச்சிகளில் 15,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதைத் தொடர்ந்து 7 மணியளவில் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 7.56 மணியளவில் ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் துவங்குகிறது. சரியாக 8 மணிக்கு துவங்கும் ஒலிம்பிக் முக்கிய துவக்க விழா நள்ளிரவு 11.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5.45 மணியளவில் துவங்கும் முதற்கட்ட துவக்க விழாவில் ஒலிம்பிக் வளையங்கள் அணிவகுப்பு, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் தேசியக் கொடி அணிவகுப்பு மற்றும் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 14 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

துவக்க விழாவின் இறுதி 2 மணி நேரத்தில் வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வாண வேடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்கும் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீனா பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் துவக்க விழா துவங்கும் போது மூடப்படும் பீஜிங் சர்வதேச விமான நிலையம், விழா முடிந்த பிறகே மீண்டும் திறக்கப்படும் என்பது சீனப் பாதுகாப்பின் ஒரு ஏற்பாடு.

சுத‌ந்‌திர ‌தின‌த்து‌க்கு 15,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு: காவ‌ல் ஆணைய‌ர் சேக‌ர் தகவ‌ல்!

''சுதந்திர தின விழா அ‌ன்று 15,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணிய‌ி‌ல் ஈடுப‌டு‌த்த‌ப்படு‌வா‌ர்க‌ள்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் சே‌க‌ர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், சென்னையில் சை‌க்கோ கிடையாது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினோம். ஆனா‌ல் சிலர் கேட்காமல் சைக்கோ என தகவல் பரப்பினர். அவர்களை குறைசொல்ல விரும்பவில்லை. வருங்காலத்திலாவது காவ‌ல்துறை‌யோடு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் தடுத்து நிறுத்தும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். பொதுமக்கள் 24 மணி நேரமும் காவ‌ல்துறை‌யினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சுத‌ந்‌திர ‌தி‌ன‌ம் அன்று 15,000 காவல‌ர்க‌ள் ம‌ற்று‌‌ம் உயர் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா‌ர்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக த‌ங்கு‌ம் ‌விடு‌திக‌ள், ஓ‌ட்ட‌ல்க‌‌ளி‌ல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினாலோ அல்லது சுற்றித்திரிந்தாலோ அவர்களிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் அவர்களை பற்றி தகவல் தெரிவிக்குமாறு விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

கடந்த ஒரு மாதத்தில் செ‌ன்னை‌யி‌ல் 23 வழக்குகள் பதிவு செய்து 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30,07,000 மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது எ‌ன்று காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர் கூ‌றினா‌ர்.