Search

Custom Search

Sunday, October 5, 2008

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் புத‌ன்‌கிழமை கையெழு‌த்‌திடு‌கிறா‌ர் பு‌ஷ்!

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் இ‌ந்‌‌திய- அமெ‌‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌ல் கோரு‌ம் ‌தீ‌ர்மான வரை‌வி‌ல் வரு‌கிற புத‌ன்‌கிழமை கையெழு‌த்‌திடுவா‌ர் எ‌ன்று வெ‌ள்ளை மா‌ளிகை அ‌றி‌வி‌த்து‌‌ள்ளது.

அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடு‌ப்பு உட‌ன்படி‌க்கை‌யி‌ல் கையெழு‌த்‌திடாத இ‌ந்‌தியாவுட‌ன் அணு ச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌‌ந்த‌ம் மே‌ற்கொ‌ள்ள‌க் கூடாது எ‌ன்று கடுமையாக எ‌தி‌ர்‌த்து வ‌ந்த ஜனநாயக‌க் க‌ட்‌சி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஹோவ‌ர்‌ட் பெ‌ர்மா‌ன், அ‌ண்மை‌யி‌ல் த‌‌ன்னுடைய ‌நிலையை மா‌ற்‌றி ச‌ம்ம‌தி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அ‌க்டோப‌ர் 8 (புத‌‌ன்‌கிழமை) அ‌ன்று வரை‌வி‌ல் (H R 7081) பு‌ஷ் கையெழு‌த்‌திடுவா‌ர் எ‌ன்று வெ‌ள்ளை மா‌ளிகை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு வெ‌ள்ளை மா‌ளிகை அனு‌ப்‌பியு‌ள்ள அழை‌ப்‌பி‌ல், "இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌ல் கோரு‌‌ம் ‌தீ‌ர்மான வரைவு (H R 7081) ம‌ற்று‌ம் அணு ஆயுத‌ப் பரவ‌‌ல் தடு‌ப்பு நடவடி‌க்கைகளு‌க்கு உதவு‌ம் ச‌ட்ட‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் கையெழு‌த்‌திட பு‌ஷ் உ‌ங்களை வரவே‌ற்‌கிறா‌ர்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு கடந்த மாத‌ம் 28ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்)யு‌ம், கட‌ந்த 2ஆ‌ம் தே‌தி சென‌ட் சபையு‌ம் ஒப்புதல் அளித்தன.

மா‌ற்று‌ப் பாதை‌யி‌ல் சேது கா‌ல்வா‌ய்: பொ‌றி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர் குழு ஆ‌ய்வு!

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் வ‌ழிகா‌ட்டுத‌லி‌ன் பே‌ரி‌ல் மா‌ற்று‌ப் பாதை‌யி‌ல் சேது சமு‌த்‌திர‌‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ச் செய‌‌ல்படு‌த்துவத‌ற்கான சா‌த்‌திய‌ங்க‌ள் கு‌றி‌த்து பொ‌றி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்று ஆ‌ய்வு நட‌த்‌தி வரு‌கிறது.

ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தரவு‌ப்படி நட‌ந்து வரு‌ம் இ‌‌ந்த ஆ‌ய்வு‌ப் ப‌ணி‌யி‌ல் த‌‌‌னியா‌ர் ‌நிறுவன‌த்தை‌ச் சே‌ர்‌ந்த 15 பொ‌றியாள‌ர்க‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த‌க் குழு‌வின‌ர் 2 வார‌ங்களு‌க்கு‌ள் ஆ‌ய்வை முடி‌த்து அ‌றி‌க்கை அ‌ளி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாக வருவா‌ய், சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட அ‌‌திகா‌ரிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌க் குழு‌வின‌ர் செ‌ப்ட‌ம்ப‌ர் 29 ஆ‌ம் தே‌தி முத‌‌ல் ஆ‌ய்வு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். தனு‌ஷ்கோடி, பழைய ர‌யி‌ல் ‌நிலைய‌ம், க‌ம்‌பி‌ப்பாடு, நடு‌ப்பா‌டு, ஆ‌ற்றுஓடை, அ‌ரி‌ச்ச‌ல் முனை உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் 70 முத‌ல் 90 ‌மீ‌ட்ட‌ர் ஆழ‌ம் வரை து‌ளை‌யி‌ட்டு ம‌ண் எடு‌த்து‌ள்ளன‌‌ர்.

மா‌ற்று‌ப் பாதை கு‌றி‌த்து முடிவெடு‌ப்பத‌ற்கு மு‌ன்ன‌ர் பொ‌றியாள‌ர் குழு அ‌‌ளி‌க்கு‌ம் அ‌றி‌க்கையை ‌நிபுண‌ர் குழு ப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம் எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதே பகு‌தி‌யி‌ல் ஏ‌ற்கெனவே ஆ‌ய்வு நட‌‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஆனா‌ல் அது இறு‌தி செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பு‌திய வ‌ழி‌த்தட‌ம் கு‌றி‌த்து ஆ‌ய்வு நட‌த்துவது எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்படுவதற்கு மு‌ன்பு கட‌ந்த ஆக‌ஸ்‌ட் மாத‌ம் சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட அ‌திகா‌ரிக‌ள், இ‌ந்‌திய தூ‌ர்வாரு‌ம் கழக அ‌திகா‌ரிக‌ள் ஆ‌கியோருட‌ன் வ‌ல்லுந‌‌ர் குழுவு‌ம் கல‌ந்து கொ‌ண்ட ‌விவாத‌க் கூ‌ட்ட‌ம் நட‌ந்தது.