Search

Custom Search

Friday, October 10, 2008

ரூ.7,627 கோடி‌யி‌ல் 2 புதிய மின் திட்டங்கள் : கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

த‌மிழக‌த்‌தி‌லரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களஅமை‌க்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழு‌த்தானது.


TNG
இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழக அரசும், தமி‌ழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின் வசதிக் கழகத்தின் (Rural Electrification Corporation) நிதியுதவியுடன், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் நெ‌ய்வேலி நிலக்கரி கழகத்துடன் (Neyveli Lignite Corporation) இணைந்து
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிரந்தரமாக மற்றும் நீண்டகால
தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில் நடப்பு 2008-2009ஆம் ஆண்டில் ர
ூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களை நிர்மாணித்திடவும், சீரான மின் விநியோகத் திட்டங்களை அமைத்திடவும் ஆவன செ‌ய்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமி‌ழ்நாடு மின்வாரியமும், நெ‌ய்வேலி அனல்மின் நிலையமும், இணைந்து கூட்டுத் துறையில் ரூ.4,909 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்திடும் 2 மின்திட்டங்களை அமைத்திட கிராமப்புற மின்வசதிக் கழகம் ரூ.3,437 கோடி கடனுதவியும்;

வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் தமி‌ழ்நாடு மின்வாரியம் ரூ.2,718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாடமின்உற்பத்தி செ‌ய்திடும் இரண்டாம் பிரிவை அமைத்திட கிராமப்புற மின்வசதிககழகம் ரூ.2,175 கோடி கடனுதவியும்; ஆக மொத்தம் ரூ.5,612 கோடி கடனுதவியை கிராமப்புமின்வசதிக் கழகம், தமி‌ழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்குகிறது.

இந்த திட்டங்களுக்காக இன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில்
நடைபெற்ற ஒப்பந்தத்தில் கிராமப்புற மின்வசதி கழகத்தின் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குநர் உமாசங்கர், தமிழக மின்வாரியத்தின் தலைவர்
மச்சேந்திரநாதன
், ெ‌ய்வேலி
நிலக்கரி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே.என்.பிரசன்ன
குமார் ஆகியோர் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர்.

ஞாயிறு முதல் ஸீ டி.வி.!

தமிழர்களை தொலைக்காட்சி பெட்டி முன் கட்டிப்போட மேலுமொரு தொலைக்காட்சி, ஸீ தமிழ் நெட்வொர்க்.

இந்த
வருட தொடக்கத்திலேயே தனது வேலையை தொடங்கிவிட்ட ஸீயின் தமிழ் பிரிவு வரும்
ஞாயிறு 12 ஆம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளதாம்.


குஷ்பு,
பாலசந்தரின் தொலைக்காட்சி தொடர்கள், நான் கடவுள் போன்ற புதிய மெகா
படங்களின் ஒளிபரப்பு உரிமை என கலைஞர் மற்றும் சன்னுக்கு கடும் போட்டியுடன்
களமிறங்குகிறது ஸீ டி.வி.


படத்தை தயாரித்து நாக்க முக்க போல் நிமிடத்திற்கு ஒருமுறை காதில் ஈயம் பாய்ச்சாமல் இருக்க வேண்டும் ஸீ. கடவுளை பிரார்த்திப்போம்!