Search

Custom Search

Tuesday, October 21, 2008

10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படலாம்!

உலக
நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள்
வறுமையில் தள்ளப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை அச்சம் தெரிவித்துள்ளது.


இதனை உலக வறுமை ஒழிப்பு தினமான வெள்ளியன்று ஐ. நா. தெரிவித்துள்ளது.

தற்போது
சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ.
நா., உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர்
வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளது.


"வறுமையை
ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு
அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி
மூன் தெரிவித்தார்.


2015-ற்குள்
வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல
இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தீவிர
வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கும் குறைவான தொகையில்
ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌க்கு 24 மணி நேர மழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக‌மமற்றும் புதுச்சேரியிலப‌ல்வேறு இடங்களில் மழை பெய்யும் எ‌ன்று‌மஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு
மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது இலங்கை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர
வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள
்ளது எ‌‌ன்று‌ம் இதன்காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுட‌ன் அவ்வப்போது மழை பெய்யும் எனவு‌ம், ஓரிரு முறை கனமழை பெய்யும் எனவு‌ம் தென்தமிழக‌த்தைவிட வடதமிழக‌த்‌தி‌ல் அதிகளவு மழை பெய்யும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வானிலைக்கு தனி தொலைக்காட்சி சேவை!

வானிலை
குறித்த தகவல்களை உடனுக்குடன் நாட்டு மக்களுக்கு அளிக்க தனி தொலைக்காட்சி
சேவை அடுத்த ஆண்டு துவக்கம் முதல் செயல்படத் துவங்கும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.


மக்களவையில்
இத்தகவலைத் தெரிவித்த அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல், அரசு-தனியார்
கூட்டு முயற்சியாக இத்தொலைக்காட்சி சேவை இருக்கும் என்றும், அதற்காக
தனியாரிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்றும் கூறினார்.


மழை
நிலவரம், தட்ப வெப்ப நிலை உள்ளிட்ட வானியல் மாற்றங்கள் தொடர்பான அனைத்துத்
தகவல்களும் உடனுக்குடன் மக்களுக்கு இத்தொலைக்காட்சி சேவை தெரிவிக்கும்
என்று கூறிய அமைச்சர் கபில் சிபல், துவக்கத்தில் நாளுக்கு 6 மணி நேர
சேவையாக துவங்கி, பிறகு படிப்படியாக 24 மணி நேர சேவையாக்கப்படும் என்று
கூறினார்.


2010ஆம்
ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு வானிலை தொடர்பான
முன்னறிவிப்பு செய்வதற்கான தனி அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும்
கபில் சிபல் கூறினார்.