Search

Custom Search

Thursday, October 30, 2008

ஹீலியம் 3 – ஒளிமயமான எதிர்காலத்திற்கு!

இந்தியாவின்
விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-1 விண்கலத்தின்
முக்கிய இலக்கு நிலவில் உள்ள ஹீலியம் 3 எனும் அணுப் பொருள் இருப்பை ஆய்வு
செய்வதே என்று கூறியிருந்தோம்.


உலகம்
முழுவதும் அணு மின் சக்தி உற்பத்திக்கு அடிப்படையாக இருந்துவரும் அணு
எரிபொருளான யுரேனியத்தில் உள்ள சிக்கல், அதனை அணு உலைகளில்
பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் கழிவில் உள்ள கதிர் வீச்சு
அபாயமாகும். முதல் தலைமுறை அணு உலைகள் என்றழைக்கப்படும் கடின நீர்
உலைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் யுரேனிய அணுக் கழிவில்
இருந்துதான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான புளூடோனியம் கிடைக்கிறது.
அதனால்தான் யுரேனியம் அளிக்க முன்வரும் நாடுகள் அதனை மறு சுழற்சி செய்து
தொழி்ல் நுட்ப ரீதியாக அடுத்தத் தலைமுறை அணு உலையான வேக ஈனுலையில் (
Fast Breeder Reactor) பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கக்கூடத் தயங்குகின்றன.

ஒருமுறை
பயன்படுத்தப்பட்ட யுரேனிய அணுக் கழிவை வேரொரு இடத்திற்கு கொண்டு செல்லவதோ
அல்லது மிக பாதுகாப்பாக அதனை கையாள்வதோ கூட ஆபத்து நிறைந்ததே. இது ஒரு
பெரும் பிரச்சனையாகவே உள்ளது. ஆனால், இந்தியா பயன்படுத்தப்பட்ட
யுரேனியத்தை மறு சுழற்சி செய்து அதனை வேக ஈனுலையில் பயன்படுத்தவும்,
அதன்மூலம் அணு கதிர் வீச்சு அபாயத்தை
‘0’ அளவி்ற்கு குறைத்தும் சாதனை புரிந்துள்ளது.

ஆயினும்
பாதுகாப்பான அணு சக்தி என்று இப்புவியில் ஏதுமில்லை என்ற நிலையில்தான்,
நிலவில் ஏராளமாகவுள்ள ஹீலியம் 3 அறிவியலாளர்களின் கருத்தைக் கவர்ந்தது.

நமது
புவியில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கும் (இல்மனைட் என்ற கனிமத்துடன்
கலந்துள்ளது) ஹீலியம் 3, நிலவில் ஏராளமாகக் கிடைக்கிறது. சூரியனில்
இருந்து வீசும் புயல்களில் பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்படும் ஹீலியம்,
அப்புயல்கள் நிலவுப் பரப்பைத் தாக்கும்போது அதன் மண்ணோடு மண்ணாகக்
கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு புவியில் ஏற்படாமல் புவியின் மீது
கவிந்துள்ள வளிமண்டலம் காத்துவிடுகிறது. அதனால்தான் புவியில் இது பெரிய
அளவிற்கு கிடைக்கவில்லை.


நிலவின் மேற்பரப்பில் (Regolith) உள்ள
பாறைகள், மண்ணில் கலந்துள்ள ஒரு மில்லியன் டன் ஹீலியத்தைக் கொண்டு
புவியின் எரிசக்தித் தேவையை 1,000 ஆண்டுகளுக்கு குறைவின்றி
தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்த காலம் முதல்
நிலவின் மீதான மனிதனின் கவனம் (அரசுகளின் கவனம் என்று கொள்க) அதிகரித்தது.
அதுமுதல் நிலவை அவன் நோக்கிய பார்வையே மாறியது.


21ஆம்
நூற்றாண்டின் மத்திய கிழக்காசியா (எண்ணை வளத்தைப் பெற்ற அரபு நாடுகளைப்
போன்று) நிலவுதான் என்று கூற ஆரம்பித்தனர். 2004ஆம் போட்ட ஒரு
மதிப்பீட்டின்படி, இன்றைக்கு 5.7 மில்லியன் செலவு செய்து உருவாக்கக் கூடிய
எரிசக்தியை ஒரு கிலோ ஹீலியம் 3ஐக் கொண்டு உருவாக்கலாம் என்று
ஒப்பிடப்பட்டது.

கொழு‌ம்பு, ம‌ன்னா‌ரி‌ல் விடுதலைப்புலிக‌ள் விமானம் குண்டு வீச்சு!

சிறிலங்கா தலைநகரகொழும்பினபுறநகர்பபகுதியிலஉள்அனலமினஉற்பத்தி நிலையமமீதும், மன்னாரமாவட்டத்திலஉள்தள்ளாடி படைத்தளமமீதுமதமிழீவிடுதலைபபுலிகளினவானூர்திகளகுண்டுததாக்குதலநடத்தியுள்ளஎன்றசிறிலங்க படைதரப்பதெரிவித்துள்ளது.

தள்ளாடி சிறிலங்கபடைத்தளமமீதஇன்று இரவு 10.50 ம‌ணி‌க்கு விடுதலைபபுலிகளினவானூர்தி ஒன்றகுண்டுத்தாக்குதலநடத்தியுள்ளது. இதில் உ‌யி‌ர் சேதங்களஎதுவுமஏற்படவில்லை.

அதேநேரம், கொழும்பினபுறநகர்ப்பகுதியாகளனி திசவிலஅமைந்துள்அனலமினஉற்பத்தி நிலையமமீதுமஇன்றிரவு 11.30 ம‌ணி அள‌வி‌ல் விடுதலைபபுலிகளினவானூர்தி குண்டுகளவீசியுள்ளது.

விடுதலைபபுலிகளினவானூர்திக்கஎதிராசிறிலங்கபடையினரவானூர்தி எதிர்ப்பதுப்பாக்கிகளமூலமதாக்குதலநடத்தியுள்ளனரஎன்றபடைத்தரப்பமேலுமதெரிவித்துள்ளது.

விடுதலைபபுலிகளினவானூர்தியினதாக்குதலினாலகளனி திமினஉற்பத்தி நிலையமதீப்பற்றி எரிவதாகவுமஅதனஅணைப்பதற்கதீயணைப்பபடையினரவிரைந்தசென்றகொண்டிருப்பதாகவுமகொழும்பசெய்திகளதெரிவிக்கின்றன.

வானூர்தி தாக்குதலதொடர்பிலவிடுதலைபபுலிகளஅதிகாரபூர்வமாஇதுவரஎதனையுமதெரிவிக்கவில்லை.

ஜெ.-வுக்கு கொலைமிரட்டல்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அஇஅதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை
உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.


சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இதுபற்றி வழக்கறிஞர்கள் நவநீத
கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள முறையீட்டில்,
மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


விடுதலைப்புலிகளுக்கு
எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர்
பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான், ஜெயலலிதாவிற்கும் ஏற்படும் என்று
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.


தமிழ்
மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதில்
‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து என்று
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.


இதன்
தலைமையகம் கனடாவில் குவிஸ் ஹவுஸ் என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில்
கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பக்க கடிதம் மலேசியாவிலிருந்து
அனுப்பப்பட்டுள்ளது.


எனவே
ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய
வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

மின்வெட்டை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனை: ‌விஜயகா‌ந்‌த்!

தமிழ்நாட்டில்
மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை
திருப்பவே, முதல்வருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை பயன்பட்டது என்று த
ே.ு.ி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌‌‌ர்பாஅவ‌ரவெளியிட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் தமிழக நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளராஜினாமா செய்வார்கள் என்றும் அனைத்து‌க்கட்சி
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இரண்டு வாரங்களும்
ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. நாடாளும‌ன்
உறு‌ப்‌பின‌ர்களு‌மபதவி விலகவில்லை.

டெல்லிக்கு கொடுத்த தந்தி, மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டம், அனைத்து‌கட்சி கூட்டம், நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளராஜினாமா
நாடகம், பிரதமருடன் தொலைபேசி தொடர்பு, மழையில் கட்டாய மனிதச் சங்கிலி
என்றெல்லாம் முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உணர்ச்சிப் பிழம்பாக
ஆனார்.


பிறகு,
இலங்கை அரசின் சிறப்பு பிரதிநிதி டெல்லி வருகை, சோனியா காந்தி
தொலைபேசியில் முதல்வருடன் பேச்சு, வெளியுறவுத் துறை அமைச்சர் சென்னையில்
முதல்வரை வீட்டில் சந்தித்தது போன்றவையெல்லாம் நடந்தவுடன், இலங்கை தமிழர்
பிரச்சனையை காற்றுப்போன பலூனாக முதல்வர் ஆக்கிவிட்டார். இது ஒன்றும்
புதிதல்ல. 1971ல் காவிரிப் பிரச்சனை, 1974ல் கச்சத் தீவு பிரச்
னை போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுதானே வருகிறோம்.

இலங்கை‌த்
தமிழர் பிரச்சனை, முதல்வரைப் பொருத்தவரையில் ஒரு தற்காலிக நிவாரணியாகவே
இருந்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத்
திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அவருக்கு
பயன்பட்டது.


முதல்வர் கருணாநிதி, இலங்கை‌தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார்.

முதல்வர்
முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் தமிழர்
பிரச்சனைக்கும் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின்
அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்றும் இலங்கை
அதிபர் வேண்டுகோள் விட்டதில் இருந்து, இலங்க
ை‌தமிழர் பிரச்சனையில் எத்தகைய மகத்தான பணியை முதல்வர் ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்'' எ‌ன்று ‌விஜயகா‌ந்‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.