Search

Custom Search

Saturday, November 8, 2008

சிறிலங்க இராணுவ ஒதுக்கீடு 160 கோடி டாலர்!

ிறிலங்க
இராணுவத்திற்கு இந்த நிதியாண்டில் 160 கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளதாக
அந்நாட்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அதிபர் மகிந்தா ராஜபக்சே
கூறியுள்ளார்.


சிறிலங்க
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துப்
பேசிய ராஜ பக்சே, விடுதலைப் புலிகள் சரண்டைய வேண்டும் அல்லது தோல்வியை
எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.


“ஆயுதங்களை
கீழே போட்டுவிட்டு ஜனநாயக பாதைக்குத் திரும்புங்கள் என்பதே
பயங்கரவாதிகளுக்கு நான் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள், இதனை
கேட்கவில்லையென்றால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படுவீர்கள
்” என்று
கூறிய ராஜபக்சே, பயங்கரவாததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறு
சீரமைப்பிற்காக பல பொருட்களின் மீதும், சேவைகளின் மீதும் ஒரு விழுக்காடு
வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.


இராணுவத்தினருக்கும் அளிக்கும் சிறப்புப் படியை ரூ.3,000த்திலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்துவதாகவும் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்துவேன்: ஒபாமா!



[Faatamil File]
அமெரிக்காவில்
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய முறையில் தீர்வு கண்டு, அதனை
நிலைநிறுத்துவேன் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக்
ஒபாமா உறுதி கூறினார்.


அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி சவால்களை தீர்ப்பதே தனது உடனடி முக்கியத்துவம் என்றும் அவர் கூறினார்.

அதிபர்
தேர்தலில் சாதனை வெற்றியைப் பெற்ற பின் ஒபாமா தனது சொந்த மாகாணமான
சிகாகோவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில்
முதல்முறையாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஒபாமா, நிதி நெருக்கடியால்
பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதுடன், நடுத்தர அமெரிக்கர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்றார்.

தவிர,
நிதிநெருக்கடியை எதிர்கொள்ளவும், அதனை சீர்படுத்தவும் தனது பொருளாதார
ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.


தனது
தலைமையிலான புதிய அரசு பொருளாதார நெருக்கடிக்கு உடனடி முன்னுரிமை அளித்து
செயல்படும் என்றும், ஏற்கனவே தாம் தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட
வாக்குறுதிகளின்படி உரிய முறையில் செயலாற்றப் போவதாகவும் ஒபாமா
உறுதியளித்தார்.