சிங்களப் படையினருக்கு சிகிச்சையளிக்க பயன்படும், உயிர்காக்கும் 'பெத்தடின்' மருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி உறுப்பினர்
ஒருவர், ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 'பெத்தடின்'
உயிர்க்காக்கும் மருந்துகள் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக கவலை
தெரிவித்தார்.
இதற்கு
பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டே கூறுகையில்,
"தற்போதைய போர் காரணமாக, 'பெத்தடின்' மருந்து வெகுவிரைவில்
காலியாகிவிட்டது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த மருந்துக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.
"எனினும்,
இந்த மருந்துகளை அனுப்பிவைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி,
இன்னும் சில தினங்ளில் மருந்துகள் இலங்கை வந்து சேரும்" என்றும் அவர்
தெரிவித்தார்.
இலங்கைப் போரில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 'பெத்தடின்' பயன்படுத்தப்படுகிறது.
படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக
இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இது சிறந்த வலி நீக்கியாகவும், உயிர்
காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.