Search

Custom Search

Saturday, February 21, 2009

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!..
இலங்கையின் வன்னிப்
பகுதியில் சிறிலங்கப் படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து
நடத்திவரும் எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 126
பேர் காயமுற்றுள்ளனர்.

Faa Photo

வன்னியில்
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும்
நேற்று நள்ளிரவு 1 மணி முதல் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 24
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களின்
உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


இதேபோல்
இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள்
குடியிருப்புகளை நோக்கி நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் மேலும் 10
பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமுற்றனர்.


புதுக்குடியிருப்பில்
உள்ள பொக்கணை என்ற பகுதியின் மீது இன்று காலை முதல் சிறிலங்கப் படையினர்
நடத்திய தாக்குதலி்ல் மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர்
காயமுற்றுள்ளனர்.

faa Photo

இந்த
ஆண்டின் துவக்கத்திலிருந்து கடந்த 15ஆம் தேதிவரை சிறிலங்க படையினரின்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,316 பேர்,
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,059. இவர்கள் மட்டுமின்றி,
சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 304.


புதுக்குடியிருப்பை வளைத்து விட்டோம்: சிறிலங்க அரசு

முல்லைத்தீவுப்
பகுதியில் உள்ள முக்கிய நகரமான புதுக்குடியிருப்பை சுற்றி
வளைத்துவிட்டதாகவும், அம்பலவாணன்பொக்கை என்ற நகர்புறத்தை
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.


விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான புதுக்குடியிருப்பை கைப்பற்ற
இன்று நடந்த கடும் சண்டையில், புலிகளின் இரண்டு மூத்த தளபதிகள்
கொல்லப்பட்டதாகவும், நீரில் மூழ்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களைக்
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசின் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா
கூறியுள்ளார்.

No comments: