இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு தாலிபான்கள் மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக
நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், சமீபத்தில் ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு வாஷிங்டன்
திரும்பியுள்ளார்.
தனது,
சுற்றுப்பயணம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள
பேட்டியில், "பாகிஸ்தான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும்
இடையே செய்யப்பட்டுளள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், வடமேற்கு
மாகாணங்களில் ஷாரியா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது
குறித்தும் அமெரிக்காவின் கவலையை ஜர்தாரியிடம் தெரிவித்தேன்" என்றார்.
இந்த ஒப்பந்தங்களால், தாலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆபத்தாக திகழ்வதாக ஜர்தாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதை ஜர்தாரி மறுக்கவில்லை என்றும்,
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறதா என்பதும்
எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை
நடத்தி வருகிறது என்றும் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

No comments:
Post a Comment