பொருளாதாரத்தை மீட்பதற்காக நிதியுதவி அளிக்கும் சட்டத்தில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றார் பாரக் ஒபாமா.
பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டை மீட்பதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பொருளாதாரத்தை
மீட்பதற்காக 787 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் 'பொருளாதார மீட்பு
மற்றும் மறு முதலீடு சட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு,
கடந்தவாரம் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.
1,534 பக்கங்கள்
கொண்ட இந்த சட்டத்தில், ஒபாமா நேற்று கையெழுத்திட்டார். பின்னர் அவர்
கூறுகையில், "அமெரிக்க மக்களின் கனவு உயிர்ப்புடன் இருப்பதற்கான அடிப்படை
பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம்" என்றார்.
இந்த
நிதியுதவியின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் 30 லட்சத்திலிருந்து 40 லட்சம்
வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், நவீன
உள்கட்டமைப்புக்கு தேவையான மிகப்பெரிய முதலீடு, நிதி முதலீடு போன்றவை
உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஒபாமா, இதன்மூலம் அமெரிக்கா
பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் மீட்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment