Search

Custom Search

Wednesday, March 25, 2009

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் இணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கானஃபிக்கர் சி (Conficker C) என்ற வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு நிபுணர் கூறியுள்ளார்.

கானஃபிக்கர் சி வைரஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோசமாக கணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இது கணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்து கொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கானஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்று கூறிவதற்கில்லை என்றாலும், இந்த வைரஸ் கண்டிப்பாக ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் எ‌ன்றே தெ‌ரி‌கிறது என்றும், இணையத்தில் மறைந்திருந்து குறிப்பிட்ட தேதியில் தாக்கும்படி உள்ளது என்றும் கூறியுள்ளார். தா‌க்கு‌ம் அபாய‌ம்

சீனாவில் ‘யூ-டியூப்’ இணையதளத்திற்கு தடை?

பிரபல வீடியோ இணையதளமான யூ-டியூப் (YouTube) தளத்திற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் சீனாவில் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அந்நாட்டு அயலுறவு அமைச்சக பேச்சாளர் கின் காங் கூறுகையில், சீன அரசு இணையதள பயனபாட்டிற்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை நேர்மாறானது.

இணையதள பயன்பாட்டிற்கு போதிய சுதந்திரம் சீனாவில் உள்ளது. அதே தருணத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும் தகவல்களை தடை செய்வதும் அரசின் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் இரவு முதல் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாற்று குறித்து கேட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கின் காங் தெரிவித்தார்.

Saturday, March 7, 2009

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

Employeeடெல்லி: மார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக - மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், 'எல்லாம் போச்சு...' என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம்.

ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ.

இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.

இன்னும் இரு தினங்களில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறார் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன்

Michael Jackson
மைக்கேல் ஜாக்ஸன்... எப்போது கேட்டாலும் நரம்புகளை முறுக்கேற்றும் அற்புத இசைக்குச் சொந்தக்காரர், பாப் இசையின் மன்னன். இசைப்புயல் என்ற பட்டம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ஜாக்சனுக்கு முழுமையாகப் பொருந்தும்.

இன்றுவரை வேறு யாரும் அருகில்கூட வர முடியாத அதிரடி சாதனைகளைச் செய்தவை இவரது இசைத் தட்டுகளும் ஒலிப்பேழைகளும்.

கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கடந்து கண்ணீர் வழிய இவரது 'ஹீல் த வேர்ல்ட்...' பாடலை இன்றும் கோடிக்கணக்கான இசை விரும்பிகளும் மனிதாபிமானிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், இசையுலகின் உச்சத்தைத் தொட்ட இந்த மகா கலைஞனின் வாழ்க்கை பல புயல்களில் சிக்கியதில் இசை வாழ்க்கை பாதித்தது. அவரிடமிருந்து நல்ல இசை வருவது அடியோடு நின்றே போனது.

இப்போது மிக மீண்ட இடைவெளிக்கு்ப் பிறகு லண்டனில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த முறை அவர் நடத்தப் போவது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு இசை ரசிகனும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமையும் சிறப்பு இசை நிகழ்ச்சி அது. தொடர்ந்து 10 லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் லண்டனில் மட்டும்.

நேரடி ஒளிபரப்பாக ஜாக்ஸனின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்த மகா கலைஞனைப் பார்ப்போமா என்பதே சந்தேகம்தான்.

'உண்மைதான் நண்பர்களே, இந்த நிகழ்ச்சியோடு என் இசைப் பயணத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். வருகிற மே மாதம் எனது கடைசி இசைப் பயணத்தைத் துவங்குகிறேன். அப்போது நேரில் சந்திக்கிறேன், அனைவரையும்' என்று நேற்று அறிவித்துள்ளார் மைக்கேல் ஜாக்ஸன்.