Search

Custom Search

Saturday, January 10, 2009

மினரல் வாட்டரைவிட பெட்ரோல் விலை மலிவு

ச‌ர்வதேச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலை ‌வீ‌ழ்‌ச்‌சி‌யா‌லமினரல் த‌‌ண்‌‌ணீ‌ரவிலையைவிட பெட்ரோல் விலை குறைந்து விட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரபேர‌் 38 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உற்பத்தி விலையை கணக்கிடும்போது, தண்ணீர் பாட்டிலை விட குறைவாக இருக்கிறது.

முன்பு பேரல் ஒன்றுக்கு 150 அமெரிக்க டால‌வரவிற்று வந்த கச்சா எண்ணெய், தற்போது பேரல் 38 டாலருக்கு கிடைக்கிறது. ஒரு பேரல் எ‌ன்பது சுமார் 190 லிட்டர் க‌ச்சஎ‌ண்ணெ‌ய். இதன் விலை சுமார் ரூ.1,800. (38 அமெ‌ரி‌க்டால‌ர்)

190 லிட்டர்
கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தால் 28 லிட்டர் பெட்ரோலு‌ம், 85 லிட்டர்
டீசலு‌ம் பெறலாம். இது தவிர மண்ணெண்ணெய் போன்ற மற்ற பெட்ரோலியப்
பொருட்களும் சுத்திகரிக்கலாம்.


இதன்படி
கணக்கு பார்த்தால் போக்குவரத்து செலவு மற்றும் வரிகள் இல்லாமல் ஒரு
லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.11, டீசல் அடிப்படை விலை ரூ.13.
ஆனால் ஒரு லிட்டர் த‌ண்‌ணீ‌ர
பாட்டிலின் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

பெட்ரோல்
பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.49க்கும், டீசல், ரூ.35‌க்கும்
விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22 வரை வரி
விதிக்கப்படுகிறது.

யு.எஸ். ராக்கெட் தாக்குதல்: அல்கய்டாவின் 2 முக்கிய தளபதிகள் பாகிஸ்தானில் பலி

பாகிஸ்தான்
எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ராணுவம் இம்மாதம் நடத்திய
தாக்குதலில் அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் 2 முக்கியத் தளபதிகள்
உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


இவர்களில்
ஒருவர் பாகிஸ்தானின் மரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட
பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுதொடர்பாக
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில்,
பாகிஸ்தானில் அல்கய்டாவின் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் உசமா
அல்-கினி மற்றும் அவரது உதவியாளரான படைத்தளபதி ஷேக் அகமது சலீம் ஸ்வீடன்
ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவ
நடத்திய ராக்கெட் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக பயங்கரவாத தடுப்பு அதிகாரி
தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.


இவர்கள்
இருவரும் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத்
தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்றும், கடந்த 1998இல் கிழக்கு
ஆப்ரிக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
தொடர்பாக அமெரிக்க புலனா‌ய்வு அமைப்பின் முதன்மை குற்றவாளிகள்
பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி
தெரிவிக்கிறது.


மரியாட்
நட்சத்திர விடுதியின் மீது கடந்தாண்டு செப்டம்பரில் நடத்திய தாக்குதல்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு
முன் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் உசாமா அல்-கினி
தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம் இடைத் தேர்தல்: 74 விழுக்காடு வாக்குப் பதிவு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத் தேர்தலில் 74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
ஓரிரு சிறு சம்பவங்களைத் தவிர, பொதுவாக அமைதியுடன் தேர்தல் நடந்து
முடிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று
மாலை 4 மணி வரை 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய
வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கடைசி ஒரு மணி நேரத்திலும் வாக்குப் பதிவு
விறுவிறுப்பாக இருந்துள்ளதெனவும், மொத்தத்தில் 74 விழுக்காடு வாக்குகள்
பதிவாகியுள்ளதெனவும் பொதுவான தகவல்கள் தெரிவிக்கின்றன.


தி.மு.க.
வேட்பாளர் லதா அதியமான், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம்,
தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் ஆகியோர் இடையேதான் போட்டி நிலவுகிறது.


வாக்குப்
பெட்டிகள் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வரும்
12ஆம் தேதி திங்கட் கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்படும்.